சீவக சிந்தாமணி 2311 - 2315 of 3145 பாடல்கள்
2311. பொய்கை போர்க்களம் புற இதழ் புலவு வாள் படை புல் இதழ்
ஐய கொல் களிறு அக இதழ் அரசர் அல்லி தன் மக்களா
மையில் கொட்டை அம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையால்
பைய உண்டபின் கொட்டை மேல் பவித்திரத் தும்பி பறந்ததே
விளக்கவுரை :
2312. கலை முத்தம் கொள்ளும் அல்குல் கார் மழை மின் அனார் தம்
முலை முத்தம் கொள்ளச் சாந்தம் அழிந்து தார் முருகு விம்மும்
மலை முத்தம் கொள்ளும் மார்பின் மன்னனும் கண்டு காய்ந்தான்
சிலை முத்தம் கொள்ளும் திண் தோள் செம்மலும் தீயின் சேந்தான்
விளக்கவுரை :
[ads-post]
2313. தன் மதம் திவண்ட வண்டு தங்கிய காட்டுள் வேழம்
பின் மதம் செறித்திட்டு அஞ்சிப் பிடி மறந்து இரிந்து போகும்
வெல் மதக் களிற்று வெய்ய அசனி வேகத்தின் மேலான்
மின் உமிழ் மாலை வேந்தன் வீரற்கு விளம்பினானே
விளக்கவுரை :
2314. நல்வினை உடைய நீரார் நஞ்சு உணின் அமுதம் ஆகும்
இல்லையேல் அமுதும் நஞ்சாம் இன்னதால் வினையின் ஆக்கம்
கொல்வல் யான் இவனை என்றும் இவன் கொல்லும் என்னை என்றும்
அல்லன நினைத்தல் செல்லார் அறிவினால் பெரிய நீரார்
விளக்கவுரை :
2315. அகப்படு பொறியினாரை ஆக்குவார் யாவர் அம்மா
மிகப்படு பொறியினாரை வெறியராச் செய்யலாமோ
நகைக் கதிர் மதியம் வெய்தா நடுங்கச் சுட்டிடுதல் உண்டே
பகைக் கதிர்ப் பருதி சந்தும் ஆலியும் பயத்தல் உண்டே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2311 - 2315 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books