சீவக சிந்தாமணி 2306 - 2310 of 3145 பாடல்கள்
2306. திங்களோடு உடன் குன்று எலாம் துளங்கி மாநிலம் சேர்வபோல்
சங்கம் மத்தகத்து அலமரத் தரணி மேல் களிறு அழியவும்
பொங்கு மா நிரை புரளவும் பொலம் கொள் தேர் பல முறியவும்
சிங்கம் போல் தொழித்து ஆர்த்து அவன் சிறுவர் தேர்மிசைத் தோன்றினார்
விளக்கவுரை :
2307. சந்தனம் சொரி தண் கதிர்த் திங்கள் அம் தொகை தாம் பல
குங்குமக் கதிர்க் குழவி அம் செல்வனோடு உடன்பொருவ போல்
மங்குல் மின் என வள்ளல் தேர் மைந்தர் தேரொடு மயங்கலின்
வெம் கண் வில் உமிழ் வெம் சரம் மிடைந்து வெம்கதிர் மறைந்ததே
விளக்கவுரை :
[ads-post]
2308. குருதிவாள் ஒளி அரவினால் கொள்ளப்பட்ட வெண்திங்கள் போல்
திருவ நீர்த் திகழ் வலம்புரி வாய் வைத்து ஆங்கு அவன் தெழித்தலும்
பொருவில் கீழ் வளி முழக்கினால் பூமிமேல் சனம் நடுங்கிற்றே
அரவ வெம்சிலை வளைந்ததே அண்ணல் கண் அழல் உமிழ்ந்ததே
விளக்கவுரை :
2309. கங்கை மாக்கடல் பாய்வதே போன்று காளை தன் கார்முகம்
மைந்தர் ஆர்த்து அவர் வாய் எலாம் நிறைய வெம்சரம் கான்ற பின்
நெஞ்சம் போழ்ந்து அழல் அம்பு உண நீங்கினார் உயிர் நீள் முழைச்
சிங்க ஏறுகள் கிடந்த போல் சிறுவர் தேர் மிசைத் துஞ்சினார்
விளக்கவுரை :
2310. நிவந்த வெண் குடை வீழவும் வேந்தர் நீள் விசும்பு ஏறவும்
உவந்து பேய்க் கணம் ஆடவும் ஓரி கொள்ளை கொண்டு உண்ணவும்
கவந்தம் எங்கணும் ஆடவும் களிறு மாவொடு கவிழவும்
சிவந்த சீவக சாமி கண் புருவமும் முரி முரிந்தவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2306 - 2310 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books