சீவக சிந்தாமணி 2301 - 2305 of 3145 பாடல்கள்
2301. உழை இனம் உச்சிக் கோடு கலங்குதல் உற்ற போதே
விழைவு அற விதிர்த்து வீசி விட்டு எறிந்திடுவது ஒப்பக்
கழலவர் உள்ளம் அஞ்சிக் கலங்குமேல் அதனை வல்லே
மழைமினின் நீக்கி இட்டு வன் கண்ணர் ஆபர் அன்றே
விளக்கவுரை :
2302. தற் புறம் தந்து வைத்த தலைமகற்கு உதவி ஈந்தால்
கற்பக மாலை சூட்டிக் கடி அர மகளிர்த் தோய்வர்
பொற்ற சொல் மாலை சூட்டிப் புலவர்கள் புகழக் கல் மேல்
நிற்பர் தம் வீரம் தோன்ற நெடும் புகழ் பரப்பி என்றான்
விளக்கவுரை :
[ads-post]
2303. பச்சிரும்பு எஃகு இட்டாங்குப் படையைக் கூர்ப்பு இடுதலோடும்
கச்சையும் கழலும் வீக்கிக் காஞ்சனத் தளிவம் வாய்க்கு இட்டு
அச்சு உற முழங்கி ஆரா அண்ணல் அம் குமரன் கையுள்
நச்சு எயிற்று அம்பு தின்ன நாள் இரை ஆகல் உற்றார்
விளக்கவுரை :
2304. வடதிசை எழுந்த மேகம் வலன் உராய் மின்னுச் சூடிக்
குடதிசைச் சேர்ந்து மாரி குளிறுபு சொரிவதே போல்
படர் கதிர்ப் பைம் பொன் திண் தேர் பாங்கு உற இமைப்பின் ஊர்ந்தான்
அடர் சிலை அப்பு மாரி தாரை நின்றிட்டது அன்றே
விளக்கவுரை :
2305. அற்று வீழ் தலைகள் யானை உடலின் மேல் அழுந்தி நின்ற
பொற்ற திண் சரத்தில் கோத்த பொருசரம் தாள்கள் ஆகத்
தெற்றி மேல் பூத்த செந்தாமரை மலர் போன்ற செங் கண்
மற்று அத்தாது உரிஞ்சி உண்ணும் வண்டு இனம் ஒத்த அன்றே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2301 - 2305 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books