சீவக சிந்தாமணி 2296 - 2300 of 3145 பாடல்கள்
2296. கருவளி முழக்கும் காரும் கனை கடல் ஒலியும் கூடி
அருவலிச் சிங்க ஆர்ப்பும் ஆங்கு உடன் கூடிற்று என்ன
செருவிளை கழனி மள்ளர் ஆர்ப்பொடு சிவணிச் செம்பொன்
புரிவளை முரசம் ஆர்ப்பப் போர்த் தொழில் தொடங்கினானே
விளக்கவுரை :
2297. அரசர் தம் முடியும் பூணும் ஆரமும் வரன்றி ஆர்க்கும்
முரசமும் குடையும் தாரும் பிச்சமும் சுமந்து மாவும்
விரை பரித் தேரும் ஈர்த்து வேழம் கொண்டு ஒழுகி வெள்ளக்
குரை புனல் குருதி செல்லக் குமரன் வில் குனிந்தது அன்றே
விளக்கவுரை :
[ads-post]
2298. கேழ் கிளர் எரி கண் பேழ் வாய்க் கிளர் பெரும்பாம்பி னோடும்
சூழ் கதிர்க் குழவித் திங்கள் துறுவரை வீழ்வதே போல்
தாழ் இரும் தடக்கை யோடும் தட மருப்பு இரண்டும் அற்று
வீழ் தரப் பரந்த அப்பு நிழலில் போர் மயங்கினாரே
விளக்கவுரை :
2299. ஆடவர் ஆண்மை தோற்றும் அணிகிளர் பவழத் திண்கை
நீடு எரி நிலைக் கண்ணாடிப் போர்க்களத்து உடைந்த மைந்தர்
காடு எரி கவரக் கல் என் கவரிமா விரிந்த வண்ணம்
ஓடக் கண்டு உருவப் பைந்தார் அரிச்சந்தன் உரைக்கின்றானே
விளக்கவுரை :
2300. மஞ்சு இவர் மின் அனார் தம் வால் அரிச் சிலம்பு சூழ்ந்து
பஞ்சி கொண்டு எழுதப் பட்ட சீறடிப் பாய்தல் உண்ட
குஞ்சி அம் குமரர் தங்கள் மறம் பிறர் கவர்ந்து கொள்ள
அஞ்சி இட்டு ஓடிப் போகின் ஆண்மை யார் கண்ணது அம்மா
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2296 - 2300 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books