சீவக சிந்தாமணி 2291 - 2295 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2291 - 2295 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2291. விட்டு அழல் சிந்தி வெள் வேல் விசும்பின் வீழ் மின்னின் நொய்தாக்
கட்டு அழல் நெடுங் கண் யாதும் இமைத்திலன் மகளிர் ஓச்சும்
மட்டு அவிழ் மாலை போல மகிழ்ந்து பூண் மார்பத்து ஏற்றுக்
கட்டு அழல் எஃகம் செல்லக் கால் நெறி ஆயினானே

விளக்கவுரை :

2292. கவி மதம் கடந்து காமர் வனப்பு வீற்று இருந்த கண்ணார்
குவி முலை நெற்றித் தீம் தேன் கொப்புளித்து இட்ட பைந்தார்ச்
செவி மதக் கடல் அம் கேள்விச் சீவகன் கழல்கள் வாழ்த்திச்
சவி மதுத் தாம மார்பின் சல நிதி தாக்கினானே

விளக்கவுரை :

[ads-post]

2293. குஞ்சரம் குனிய நூறித் தடாயின குருதி வாள் தன்
நெஞ்சகம் நுழைந்த வேலைப் பறித்து வான் புண்ணுள் நீட்டி
வெம்சமம் நோக்கி நின்று மிறைக்கொளி திருத்துவான் கண்டு
அஞ்சி மற்ற அரசர் யானைக் குழாத்தொடும் இரிந்திட்டாரே

விளக்கவுரை :

2294. தோட்டு வண்டு ஒலியல் மாலைத் துடி இடை மகளிர் ஆய்ந்த
மோட்டு வெண் முத்தம் மின்னும் முகிழ் முலை உழுது சாந்தம்
கோட்டு மண் கொண்ட மார்பம் கோதை வாள் குளித்து மூழ்கிக்
கோட்டு மண் கொள்ள நின்றான் குருசில் மண் கொள்ள நின்றான்

விளக்கவுரை :

2295. எரி மணிக் குப்பை போல இருள் அற விளங்கும் மேனித்
திருமணிச் செம் பொன் மார்பின் சீவகன் சிலை கை ஏந்தி
அரு மணி அரசர் ஆவி அழல் அம்பின் கொள்ளை சாற்றி
விரி மணி விளங்கு மான் தேர் விண் தொழ ஏறினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books