சீவக சிந்தாமணி 2286 - 2290 of 3145 பாடல்கள்
2286. போர்த்த நெய்த்தோரன் ஆகிப் புலால் பருந்து ஆர்ப்பச் செல்வான்
சீர்த் தகையவனைக் கண்டு என் சினவு வேல் இன்னும் ஆர்ந்தின்று
ஊர்த்து உயிர் உன்னை உண்ணக் குறை வயிறு ஆரும் என்று ஆங்கு
ஆர்த்த வாய் நிறைய எய்தான் அம்பு பெய் தூணி ஒத்தான்
விளக்கவுரை :
2287. மொய்ப்படு சரங்கள் மூழ்க முனை எயிற்று ஆளி போல
அப்பு அணைக் கிடந்த மைந்தன் அருமணித் திருவில் வீசும்
செப்பு இள முலையினார் கண் சென்று உலாய் பிறழச் சிந்திக்
கைப்பட எடுத்திட்டு ஆடும் பொலம் கழற் காயும் ஒத்தான்
விளக்கவுரை :
[ads-post]
2288. புனைகதிர்ப் பொன் செய் நாணின் குஞ்சியைக் கட்டி நெய்த்தோர்
நனைகதிர் எஃகம் ஏந்தி நந்தன் வாழ்க என்ன நின்ற
வினை ஒளிர் காளை வேலைக் கடக்கலார் வேந்தர் நின்றார்
கனைகடல் வேலை எல்லை கடக்கலா வண்ணம் நின்றா
விளக்கவுரை :
2289. நின்ற அப் படை உளானே ஒருமகன் நீலக் குஞ்சி
மன்றல மாலை நெற்றி மழ களிறு அன்றி வீழான்
வென்று இயங்கு ஒளிறும் வெள் வேல் மின் என வெகுண்டு விட்டான்
சென்ற வேல் விருந்து செங் கண் மறவன் நக்கு எதிர் கொண்டானே
விளக்கவுரை :
2290. மான் வயிறு ஆர்ந்து நோக்கும் வெருவுறு மருளின் நோக்கின்
தேன் வயிறு ஆர்ந்த கோதைத் தீம் சொலார் கண்கள் போலும்
ஊன் வயிறு ஆர்ந்த வெள் வேல் ஒய் எனப் பறித்து நக்கான்
கான் வயிறு ஆர்ந்து தேக்கிக் களிவண்டு கனைக்கும் தாரான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2286 - 2290 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books