சீவக சிந்தாமணி 2281 - 2285 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2281 - 2285 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2281. ஊன் அமர் குறடு போல இரும்பு உண்டு மிகுத்த மார்பில்
தேன் அமர் மாலை தாழச் சிலை குலாய்க் குனிந்தது ஆங்கண்
மான் அமர் நோக்கினாரும் மைந்தரும் குழீஇய போருள்
கான் அமர் காமன் எய்த கணை எனச் சிதறினானே

விளக்கவுரை :

2282. வண்டு அலை மாலை தாழ மது உண்டு களித்து வண்கைப்
புண் தலை வேலை ஏந்திப் போர்க்களம் குறுகி வாழ்த்திக்
கண்படு காறும் எந்தை கட்டியங் காரன் என்றே
உண்டு ஒலை ஆர்க வேல் என்று உறுவலி தாக்கினானே

விளக்கவுரை :

[ads-post]

2283. கூற்று என வேழம் வீழாக் கொடி நெடுந் தேர்கள் நூறா
ஏற்றவர் தம்மைச் சீறா ஏந்திர நூழில் செய்யா
ஆற்றல் அம் குமரன் செல்வான் அலை கடல் திரையின் நெற்றி
ஏற்று மீன் இரியப் பாய்ந்த எறி சுறா ஏறு போன்றான்

விளக்கவுரை :

2284. மாலைக் கண் ஆம்பல் போல மகளிர் தம் குழாத்தில் பட்டார்
கோல வாள் போருள் பட்டால் குறு முயல் கூடு கண்டு
சாலத் தாம் பனிக்கும் பொய்கைத் தாமரை நீரர் ஆயின்
ஞாலத்தார் ஆண்மை என்னாம் என நகா வருகின்றானே

விளக்கவுரை :

2285. முடிச்சடை முனிவன் அன்று கேள்வியில் கொண்ட வேல் கண்
மடத்தகை மகளிர் கோல வருமுலை உழக்கச் சேந்து
கொடிப் பல அணிந்த மார்பின் கோவிந்தன் வாழ்க என்று
நடத்துவான் அவனை நோக்கி நகாச் சிலை பாரித்தானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books