சீவக சிந்தாமணி 2276 - 2280 of 3145 பாடல்கள்
2276. நித்தில மணி வண்டு என்னும் நெடுமதக் களிறு பாய
முத்துடை மருப்பு வல்லே உடைந்து முத்து ஒழுகு குன்றின்
மத்தக யானை வீழ்ந்து வயிரம் கொண்டு ஒழிந்தது ஆங்குப்
பத்திரக் கடிப்பு மின்னப் பதுமுகன் பகடு பேர்த்தான்
விளக்கவுரை :
2277. பத்திரக் கடிப்பு மின்னப் பங்கியை வம்பின் கட்டிக்
கொத்து அலர்த் தும்பை சூடிக் கோவிந்தன் வாழ்க என்னாக்
கைத் தலத்து எஃகம் ஏந்திக் காளை போய் வேறு நின்றான்
மத்தக யானை மன்னர் வயிறு எரி தவழ்ந்தது அன்றே
விளக்கவுரை :
[ads-post]
2278. மேகலைப் பரவை அல்குல் வெள் வளை மகளிர் செஞ் சாந்து
ஆகத்தைக் கவர்ந்து கொண்ட அணிமுலைத் தடத்து வைகிப்
பாகத்தைப் படாத நெஞ்சின் பல்லவ தேய மன்னன்
சேவகன் சிங்கநாதன் செருக்களம் குறுகினானே
விளக்கவுரை :
2279. புனை கதிர் மருப்புத் தாடி மோதிரம் செறித்துப் பொன்செய்
கனை கதிர் வாளை ஏந்திக் கால் கழல் அணிந்து நம்மை
இனையன பட்ட ஞான்றால் இறையவர்கள் நினைப்பது என்றே
முனை அழல் முளிபுல் கானம் மேய்ந்து என நீந்தினானே
விளக்கவுரை :
2280. தார் அணி பரவை மார்பில் குங்குமம் எழுதித் தாழ்ந்த
ஆரமும் பூணும் மின்ன அருவிலைப் பட்டின் அங் கண்
ஏர் படக் கிடந்த பொன் ஞாண் இருள் கெட விழிப்ப வெய்ய
பூரண சேனன் வண்கைப் பொருசிலை ஏந்தினானே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2276 - 2280 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books