சீவக சிந்தாமணி 2271 - 2275 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2271 - 2275 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2271. சாரிகை திரியும் யானை உழக்கலின் தரணி தன் மேல்
ஆர் கலிக் குருதி வெள்ளம் அருந் துகள் கழுமி எங்கும்
வீரியக் காற்றில் பொங்கி விசும்பு போர்த்து எழுதப் பட்ட
போர் நிலைக் களத்தை ஒப்பக் குருதி வான் போர்த்தது அன்றே

விளக்கவுரை :

2272. சென்றது தடக்கை தூணி சேந்த கண் புருவம் கோலி
நின்ற வில் குனிந்தது அம்பு நிமிர்ந்தன நீங்கிற்று ஆவி
வென்றி கொள் சரங்கள் மூழ்கி மெய்ம் மறைத்திட்டு மின்தோய்
குன்றின் மேல் பவழம் போலக் கோமுகன் தோன்றினானே

விளக்கவுரை :


[ads-post]

2273. பனி வரை முளைத்த கோலப் பருப்புடைப் பவழம் போலக்
குனி மருப்பு உதிரம் தோய்ந்த குஞ்சரம் கொள்ள உந்திக்
கனி படு கிளவியார் தம் கதிர் முலை பொருது சேந்த
துனி வரை மார்பன் சீறிச் சுடுசரம் சிதறி னானே

விளக்கவுரை :

2274. பன்னல் அம் பஞ்சிக் குன்றம் படர் எரி முகந்தது ஒப்பத்
தன் இரு கையினாலும் தடக்கை மால் யானையாலும்
இன் உயிர் பருகிச் சேனை எடுத்துக் கொண்டு இரிய ஓட்டிக்
கொன் முரண் தோன்ற வெம்பிக் கொலைக் களிற்று உழவன் ஆர்த்தான்

விளக்கவுரை :

2275. தருக்கொடு குமரன் ஆர்ப்பத் தன் சிலை வளைய வாங்கி
ஒருக்கு அவன் கையும் வாயும் உளம் கிழித்து உடுவம் தோன்ற
சுருக்குக் கொண்டிட்ட வண்ணம் தோன்றல் எய்திடு தலோடும்
மருப்பு இறக் களிறு குத்தி வயிரம் தான் கழிந்தது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books