சீவக சிந்தாமணி 2266 - 2270 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2266 - 2270 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2266. நித்திலக் குப்பை போல நிழல் உமிழ்ந்து இலங்கும் மேனிப்
பத்திப் பூண் அணிந்த மார்பின் பதுமுகன் பைம் பொன் சூழி
மொய்த்து எறி ஓடை நெற்றி மும் மதக் களிற்றின் மேலான்
கைத் தலத்து எஃகம் ஏந்திக் காமுகன் கண்டு காய்ந்தான்

விளக்கவுரை :

2267. மாற்றவன் சேனை தாக்கித் தளர்ந்த பின் வன்கண் மள்ளர்
ஆற்றலோடு ஆண்மை தோன்ற ஆர் உயிர் வழங்கி வீழ்ந்தார்
காற்றினால் புடைக்கப் பட்டுக் கடல் உடைந்து ஓடக் காமர்
ஏற்று இளஞ் சுறாக்கள் எங்கும் கிடந்தவை போல ஒத்தார்

விளக்கவுரை :

[ads-post]

2268. தூசு உலாம் பரவை அல்குல் துணை முலை மகளிர் ஆடும்
ஊசல் போல் சேனை ஓடப் பதுமுகன் களிற்றை உந்தி
மாசு இல் சீர் மழையின் நெற்றி மா மதி நுழைவதே போல்
காய் சின களிற்றின் நெற்றி ஆழி கொண்டு அழுத்தினானே

விளக்கவுரை :

2269. பெரு வலி அதனை நோனான் பிண்டி பாலத்தை ஏந்தி
அருவரை நெற்றிப் பாய்ந்த ஆய் மயில் தோகை போலச்
சொரி மதக் களிற்றின் கும்பத்து அழுத்தலின் தோன்றல் சீறிக்
கருவலித் தடக்கை வாளின் காளையை வெளவி னானே

விளக்கவுரை :

2270. தீ முகத்து உமிழும் வேல் கண் சில்லரிச் சிலம்பினார் தம்
காமுகன் களத்து வீழக் கைவிரல் நுதியின் சுட்டிப்
பூ முக மாலை மார்பன் பொன் அணி கவசம் மின்னக்
கோமுகன் கொலைவல் யானை கூற்று எனக் கடாயினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books