சீவக சிந்தாமணி 2261 - 2265 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2261 - 2265 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2261. வீறு இன்மையின் விலங்காம் என மத வேழமும் எறியான்
ஏறு உண்டவர் நிகர் ஆயினும் பிறர் மிச்சில் என்று எறியான்
மாறு அன்மையின் மறம் வாடும் என்று இளையாரையும் எறியான்
ஆறு அன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன்

விளக்கவுரை :

2262. ஒன்று ஆயினும் பல ஆயினும் ஓர் ஓச்சினுள் எறிய
வென்று ஆயின மத வேழமும் உளவோ என வினவிப்
பொன் தாழ் வரைப் புலிப் போத்து எனப் புனைதார் மிஞிறு ஆர்ப்பச்
சென்றான் இகல் களிறு ஆயிரம் இரியச் சின வேலோன்

விளக்கவுரை :

[ads-post]

2263. புடை தாழ் குழை பெருவில் உயர் பொன் ஓலையொடு எரிய
உடை நாணொடு கடி வட்டினொடு ஒளிர் வாளினொடு ஒருவன்
அடையா நிகர் எறி நீ என அதுவோ என நக்கான்
கிடை ஆயினன் இவனே எனக் கிளர் ஆண் அழகு உடையான்

விளக்கவுரை :

2264. இன் நீரின திரைமேல் இரண்டு இள வெம் சுடர் இகலி
மின்னோடு அவை சுழன்று ஆயிடை விளையாடு கின்றன போல்
பொன் நாணினர் பொருவில் உயர் புனை கேடகம் திரியாக்
கொன் வாளினர் கொழுந் தாரினர் கொடி மார்பினர் திரிந்தார்

விளக்கவுரை :

2265. விருந்து ஆயினை எறி நீ என விரை மார்பகம் கொடுத்தாற்கு
அரும் பூண் அற எறிந்து ஆங்கு அவன் நினது ஊழ் இனி எனவே
எரிந்து ஆர் அயில் இடை போழ்ந்தமை உணராது அவன் நின்றான்
சொரிந்தார் மலர் அர மங்கையர் தொமுதார் விசும்பு அடைந்தான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books