சீவக சிந்தாமணி 2256 - 2260 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2256 - 2260 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2256. கொடு மரம் குழைய வாங்கிக் கொற்றவன் எய்த கோல்கள்
நெடு மொழி மகளிர் கோல நிழல் மணி முலைகள் நேர்பட்டு
உடன் உழ உவந்த மார்பம் மூழ்கலில் சிங்கம் போலக்
கடல் மருள் சேனை சிந்தக் காம்பிலி மன்னன் வீழ்ந்தான்

விளக்கவுரை :

2257. பொன் நிறக் கோங்கம் பொன் பூங் குன்று எனப் பொலிந்த மேனி
நல் நிற மாவின் மேலான் நலம் கொள் தார் நபுலன் என்பான்
மின் நிற எஃகம் ஏந்தி வீங்கு நீர் மகதையார் கோன்
கொன் நிறக் களிற்றின் நெற்றிக் கூந்தல் மாப் பாய்வித்தானே

விளக்கவுரை :

[ads-post]

2258. ஏந்தல் தன் கண்கள் வெய்ய இமைத்திட எறிதல் ஓம்பி
நாந்தக உழவன் நாணி நக்கு நீ அஞ்சல் கண்டாய்
காய்ந்திலேன் என்று வல்லே கலின மாக் குன்றின் பொங்கிப்
பாய்ந்தது ஓர் புலியின் மற்று ஓர் பகட்டின் மேல் பாய்வித்தானே

விளக்கவுரை :

2259. கைப் படை ஒன்றும் இன்றிக் கை கொட்டிக் குமரன் ஆர்ப்ப
மெய்ப் படை வீழ்த்தல் நாணி வேழமும் எறிதல் செல்லான்
மைப் படை நெடுங் கண் மாலை மகளிர் தம் வனப்பின் சூழ்ந்து
கைப் படு பொருள் இலாதான் காமம் போல் காளை மீண்டான்

விளக்கவுரை :

2260. மண் காவலை மகிழாது இவண் உடனே புகழ் ஒழிய
விண் காவலை மகிழ்வீர் நனி உளிரோ என விபுலன்
வண் கார் இருள் மின்னே உமிழ் நெய் வாயது ஓர் அயில் வாள்
கண் காவல கழுகு ஓம்புவது உயரா நனி வினவும்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books