சீவக சிந்தாமணி 2251 - 2255 of 3145 பாடல்கள்
2251. சின்னப் பூ அணிந்த குஞ்சிச் சீதத்தன் சினவு பொன் வாள்
மன்னருள் கலிங்கர் கோமான் மத்தகத்து இறுப்ப மன்னன்
பொன் அவிர் குழையும் பூணும் ஆரமும் சுடர வீழ்வான்
மின் அவிர் பருதி முந்நீர்க் கோளொடும் வீழ்வது ஒத்தான்
விளக்கவுரை :
2252. கொடுஞ் சிலை உழவன் மான் தேர்க் கோவிந்தன் என்னும் சிங்கம்
மடங்க அருஞ் சீற்றத் துப்பின் மாரட்டன் என்னும் பொன் குன்று
இடந்து பொன் தூளி பொங்கக் களிற்றொடும் இறங்கி வீழ
அடர்ந்து எறி பொன் செய் அம்பின் அழன்று இடித்திட்டது அன்றே
விளக்கவுரை :
[ads-post]
2253. கோங்கு பூத்து உதிர்ந்த குன்றின் பொன் அணி புளகம் வேய்ந்த
பாங்கு அமை பரும யானைப் பல்லவ தேச மன்னன்
தேம் கமழ் தெரியல் தீம் பூந் தாரவன் ஊர்ந்த வேழம்
காம்பிலிக்கு இறைவன் ஊர்ந்த களிற்றொடு மலைந்தது அன்றே
விளக்கவுரை :
2254. கொந்து அழல் பிறப்பத் தாக்கிக் கோடுகள் மிடைந்த தீயால்
வெந்தன விலை இலாத சாமரை வீர மன்னன்
அந்தரம் புதைய வில்வாய் அருஞ் சரம் பெய்த மாரி
குந்தத்தால் விலக்கி வெய்ய கூற்று என முழங்கினானே
விளக்கவுரை :
2255. மற்றவன் உலோக பாலன் வயங்கு பொன் பட்டம் ஆர்ந்த
நெற்றி மேல் எய்த கோலைப் பறித்திட உமிழ்ந்த நெய்த்தோர்
உற்றவன் களிற்றில் பாயத் தோன்றுவான் உதயத்து உச்சி
ஒற்றை மாக் கதிரை நீட்டி ஒண் சுடர் இருந்தது ஒத்தான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2251 - 2255 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books