சீவக சிந்தாமணி 2246 - 2250 of 3145 பாடல்கள்
2246. மன்மதன் என்னும் காளை மணி ஒலிப் புரவித் தேர் மேல்
வில் மழை சொரிந்து கூற்றின் தெழித்தனன் தலைப் பெய்து ஆர்ப்பக்
கொன் மலி மார்பன் பொன் தேர் கொடுஞ் சிலை அறுப்பச் சீறிப்
பொன் வரைப் புலியின் பாய்ந்து பூமி மேல் தோன்றினானே
விளக்கவுரை :
2247. நெற்றிமேல் கோல்கள் மூன்று நெருப்பு உமிழ்ந்து அழுந்த எய்யச்
சுற்றுபு மாலை போலத் தோன்றல் தன் நுதலில் சூடிப்
பொற்றது ஓர் பவழம் தன் மேல் புனை மணி அழுத்தி ஆங்குச்
செற்று எயிறு அழுந்தச் செவ்வாய் கௌவி வாள் உரீஇனானே
விளக்கவுரை :
[ads-post]
2248. தோளினால் எஃகம் ஏந்தித் தும்பி மேல் இவரக் கையால்
நீள மாப் புடைப்பப் பொங்கி நிலத்து அவன் கவிழ்ந்து வீழக்
கீள் இரண்டு ஆகக் குத்தி எடுத்திடக் கிளர் பொன் மார்பன்
வாளினால் திருகி வீசி மருப்பின் மேல் துஞ்சினானே
விளக்கவுரை :
2249. நனை கலந்து இழியும் பைந்தார் நான் மறையாளன் பைம் பொன்
புனை கலக் குப்பை ஒப்பான் புத்திமா சேனன் பொங்கி
வனை கலத் திகிரித் தேர் மேல் மன்னரைக் குடுமி கொண்டான்
கனை எரி அழல் அம்பு எய்த கண் நுதல் மூர்த்தி ஒத்தான்
விளக்கவுரை :
2250. செண்பகப் பூங் குன்று ஒப்பான் தேவமா தத்தன் வெய்தா
விண்புக உயிரைப் பெய்வான் வீழ்தரு கடாத்த வேழம்
மண்பக இடிக்கும் சிங்கம் எனக் கடாய் மகதர் கோமான்
தெண் கடல் தானை ஓட நாணி வேல் செறித்திட்டானே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2246 - 2250 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books