சீவக சிந்தாமணி 2241 - 2245 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2241 - 2245 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2241. காதலார்க்கு அமிர்து ஈந்த கடல் பவழக் கடிகை வாய்
ஏது இலாப் புள் உண்ணக் கொடேம் என்று வாய் மடித்துக்
காது அணிந்த பொன் தோடும் குண்டலமும் நக நகா
வீ ததைந்த வரைமார்பர் விஞ்சையர் போல் கிடந்தனரே

விளக்கவுரை :

2242. குடர் வாங்கு குறு நரிகள் கொழு நிணப் புலால் சேற்றுள்
தொடர் வாங்கு கத நாய் போல் தோன்றின தொடித் திண்தோள்
படர் தீரக் கொண்டு எழுந்த பறவைகள் பட நாகம்
உடனே கொண்டு எழுகின்ற உவணப் புள் ஒத்தனவே

விளக்கவுரை :

[ads-post]

2243. வரையோடும் உரும் இடிப்ப வளை எயிற்றுக் கொழுங் குருதி
நிரை உளை அரி நல் மா நிலமிசைப் புரள்வன போல்
புரை அறு பொன் மணி ஓடைப் பொடிப் பொங்கப் பொருது அழிந்து
அரைசோடும் அரசுவா அடு களத்து ஆழ்ந்தனவே

விளக்கவுரை :

2244. தடம் பெருங் குவளைக் கண் தாழ் குழலார் சாந்து அணிந்து
வடம் திளைப்பப் புல்லிய வரை மார்பம் வாள் புல்ல
நடந்து ஒழுகு குருதியுள் நகாக் கிடந்த எரிமணிப் பூண்
இடம்படு செவ்வானத்து இளம் பிறைபோல் தோன்றினவே

விளக்கவுரை :

2245. காளம் ஆகு இருளைப் போழ்ந்து கதிர் சொரி கடவுள் திங்கள்
கோள் அரா விழுங்க முந்நீர்க் கொழுந் திரைக் குளித்ததே போல்
நீள் அமர் உழக்கி யானை நெற்றி மேல் தத்தி வெய்ய
வாளின் வாய் மதனன் பட்டான் விசயன் போர் விசயம் பெற்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books