சீவக சிந்தாமணி 2236 - 2240 of 3145 பாடல்கள்
2236. தோலாப் போர் மற மன்னர் தொடித் தோள்கள் எடுத்து ஓச்சி
மேல் ஆள் மேல் நெருப்பு உமிழ்ந்து மின் இலங்கும் அயில் வாளால்
கால் ஆசோடு அற எறிந்த கனை கழல் கால் அலை கடலுள்
நீல நீர்ச் சுறா இனம் போல் நெய்த்தோருள் பிறழ்ந்தனவே
விளக்கவுரை :
2237. கருவி ஊடு உளம் கழிந்து கணை மொய்ப்பக் கதம் சிறந்து
குருவி சேர் வரை போன்ற குஞ்சரம் கொடி அணிந்த
உருவத் தேர் இற முருக்கி உருள் நேமி சுமந்து எழுந்து
பருதி சேர் வரை போலப் பகட்டு இனம் பரந்தனவே
விளக்கவுரை :
[ads-post]
2238. மாலை வாய் நெடுங் குடை மேல் மதயானைக் கை துணிந்து
கோல நீள் கொழுங் குருதி கொள வீழ்ந்து கிடந்தன
மேலை நீள் விசும்பு உறையும் வெண் மதியம் விசும்பு இழுக்கி
நீல மாசுணத்தோடு நிலத்து இழிந்தது ஒத்தனவே
விளக்கவுரை :
2239. அஞ்சன நிறம் நீக்கி அரத்தம் போர்த்து அமர் உழக்கி
இங்குலிக இறு வரை போன்று இனக் களிறு இடை மிடைந்த குஞ்சரங்கள் பாய்ந்திடலின் குமிழிவிட்டு உமிழ் குருதி
இங்குலிக அருவி போன்று எவ்வாயும் தோன்றினவே
விளக்கவுரை :
2240. குஞ்சரம் தலை அடுத்துக் கூந்தல் மாக் கால் அணையாச்
செஞ் சோற்றுக் கடன் நீங்கிச் சினவுவாள் பிடித்து உடுத்த
பஞ்சி மேல் கிடந்து உடை ஞாண் பதைத்து இலங்கக் கிடந்தாரை
அஞ்சிப் போந்து இன நரியோடு ஓரி நின்று அலறுமே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2236 - 2240 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books