சீவக சிந்தாமணி 2231 - 2235 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2231 - 2235 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2231. மாக் கடல் பெருங் கலம் காலின் மாறு பட்டு
ஆக்கிய கயிறு அரிந்து ஓடி எங்கணும்
போக்கு அறப் பொருவன போன்று தீப்படத்
தாக்கின அரசுவாத் தம்முள் என்பவே

விளக்கவுரை :

2232. விடு சரம் விசும்பிடை மிடைந்து வெய்யவன்
படுகதிர் மறைந்து இருள் பரந்தது ஆயிடை
அடு கதிர் அயில் ஒளி அரசர் மாமுடி
விடுகதிர் மணி ஒளி வெயிலின் காய்ந்தவே

விளக்கவுரை :

[ads-post]

2233. பூண் குலாம் வனமுலைப் பூமி தேவி தான்
காண்கலேன் கடியன கண்ணினால் எனாச்
சேண் குலாம் கம்பலம் செய்யது ஓன்றினால்
மாண் குலாம் குணத்தினால் மறைத்திட்டாள் அரோ

விளக்கவுரை :

2234. கலைக் கோட்ட அகல் அல்குல் கணம் குழையார் கதிர் மணிப் பூண்
முலைக் கோட்டால் உழப்பட்ட மொய்ம் மலர்த் தார் அகன் மார்பர்
மலைக் கோட்ட எழில் வேழம் தவநூறி மதயானைக்
கொலைக் கோட்டால் உழப்பட்டுக் குருதியுள் குளித்தனரே

விளக்கவுரை :

2235. மண மாலை மடந்தையர் தம் மெல் விரலால் தொடுத்து அணிந்த
இணர் மாலை இரும் குஞ்சி ஈர்ங் குருதிப் புனல் அலைப்ப
நிண மாலைக் குடர் சூடி நெருப்பு இமையா நெய்த்தோரில்
பிண மாலைப் பேய் மகட்குப் பெரு விருந்து அயர்ந்தனரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books