சீவக சிந்தாமணி 2226 - 2230 of 3145 பாடல்கள்
2226. கழித்தனர் கனல வாள் புகைந்து கண்கள் தீ
விழித்தன தீந்தன இமைகள் கூற்று எனத்
தெழித்தனர் திறந்தனர் அகலம் இன் உயிர்
அழித்தனர் அயிலவர் அரவம் மிக்கதே
விளக்கவுரை :
2227. பொரும் களத்து ஆடவர் பொருவில் பைந்தலை
அரும் பெறல் கண்ணியோடு அற்று வீழ்வன
கருங் கனிப் பெண்ணை அம் கானல் கால் பொர
இரும் கனி சொரிவன போன்ற என்பவே
விளக்கவுரை :
[ads-post]
2228. பணை முனிந்து ஆலுவ பைம் பொன் தாரின
கணை விசை தவிர்ப்பன கவரி நெற்றிய
துணை அமை இளமைய தோற்றம் மிக்கன
இணை மயிர்ப் புரவியோடு இவுளி ஏற்றவே
விளக்கவுரை :
2229. கூர் உளி முகம் பொரக் குழிசி மாண்டன
ஆர் ஒளி அமைந்தன ஆய் பொன் சூட்டின
கார் ஒளி மின் உமிழ் தகைய கால் இயல்
தேரொடு தேர் தம்முள் சிறந்து சேர்ந்தவே
விளக்கவுரை :
2230. அஞ்சனம் எழுதின கவளம் ஆர்ந்தன
குஞ்சரம் கூற்றொடு கொம்மை கொட்டுவ
அஞ்சன வரை சிறகு உடைய போல்வன
மஞ்சு இவர் குன்று என மலைந்த வேழமே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2226 - 2230 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books