சீவக சிந்தாமணி 2221 - 2225 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2221 - 2225 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2221. குலம் கெழு மகளிர் தம் கோலம் நீப்பவும்
அலங்கு உளைப் புரவியும் களிறும் மாளவும்
நிலமகள் நெஞ்சு கையெறிந்து நையவும்
புலமகன் சீறினன் புகைந்தது எஃகமே

விளக்கவுரை :

2222. குணில் பொரக் குளிறின முரசம் வெள் வளை
பணை பரந்து ஆர்த்தன பம்பை வெம்பின
இணை இல எழுந்த தாழ் பீலி எங்கணும்
முணையினால் கடல் அக முழக்கம் ஒத்தவே

விளக்கவுரை :

[ads-post]

2223. முடி மனர் எழுதரு பருதி மொய் களிறு
உடை திரை மாக்கலம் ஒளிறு வாள் படை
அடுதிறல் எறி சுறா ஆகக் காய்ந்தன
கடல் இரண்டு எதிர்ந்தது ஓர் காலம் ஒத்ததே

விளக்கவுரை :

2224. அருங் கணை அடக்கிய ஆவ நாழிகை
பெரும் புறத்து அலமரப் பிணித்த கச்சினர்
கருங் கழல் ஆடவர் கருவில் வாய்க் கொளீஇக்
சொரிந்தனர் கணை மழை விசும்பு தூர்ந்ததே

விளக்கவுரை :

2225. நிணம் பிறங்கு அகலமும் தோளும் நெற்றியும்
அணங்கு அருஞ் சரங்களின் அழுத்தி ஐ என
மணம் கமழ் வரு புனல் மறலும் மாந்தரின்
பிணங்கு அமர் மலைந்தனர் பெற்றி இன்னதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books