சீவக சிந்தாமணி 2216 - 2220 of 3145 பாடல்கள்
2216. கொல் நுனைக் குந்தமும் சிலையும் கூர் நுதி
மின் நிலை வாளோடு மிலேச்சர் ஏறலின்
பொன் அரிப் புட்டிலும் தாரும் பொங்குபு
முன் உருத்து ஆர்த்து எழப் புரவி மொய்த்தவே
விளக்கவுரை :
2217. மாலையும் கண்ணியும் மணந்த சென்னியர்
ஆலுபு செறி கழல் ஆர்க்கும் காலினர்
பாலிகை இடை அறப் பிடித்த பாணியர்
சாலிகை உடம்பினர் தறுகணாளரே
விளக்கவுரை :
[ads-post]
2218. போர் மயிர்க் கேடகம் புளகத் தோற்பரம்
வயிர் மயிர்க் கிடுகொடு வள்ளித் தண்டையும்
நேர் மரப் பலகையும் நிரைத்த தானை ஓர்
போர் முகப் புலிக் கடல் புகுந்தது ஒத்ததே
விளக்கவுரை :
2219. பார் நனை மதத்த பல் பேய் பருந்தொடு பரவச் செல்லும்
போர் மதக் களிறு பொன் தேர் நான்கரைக் கச்சம் ஆகும்
ஏர் மணிப் புரவி ஏழ் ஆம் இலக்கம் ஏழ் தேவ கோடி
கார் மலிக் கடல் அம் காலாள் கற்பகத் தாரினாற்கே
விளக்கவுரை :
2220. நிழல் மணிப் புரவித் திண் தேர் நிழல் துழாய்க் குனிந்து குத்தும்
அழல் திகழ் கதத்த யானை ஐந்தரைக் கச்சம் ஆகும்
எழில் மணிப் புரவி ஏழ் ஆம் இலக்கம் ஏழ் தேவ கோடி
கழல் மலிந்து இலங்கும் காலாள் கட்டியங் காரற்கு அன்றே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2216 - 2220 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books