சீவக சிந்தாமணி 2211 - 2215 of 3145 பாடல்கள்
2211. அத்த மா மணிவரை அனைய தோன்றல
மத்தகத்து அருவியின் மணந்த ஓடைய
முத்து உடை மருப்பின் முனைக்கண் போழ்வன
பத்தியில் பண்ணின பரும யானையே
விளக்கவுரை :
2212. கோல் பொரு கொடுஞ் சிலை குருதி வெம்படை
மேலவர் அடக்குபு வேழம் ஏறலின்
மால் இரு விசும்பு இடை மணந்த ஒண் கொடி
கால் பொரு கதலிகைக் கானம் ஒத்தவே
விளக்கவுரை :
[ads-post]
2213. குடை உடை நிழலன கோலம் ஆர்ந்தன
கிடுகு உடைக் காப்பின கிளர் பொன் பீடிகை
அடி தொடைக்கு அமைந்தன அரவத் தேர்த் தொகை
வடிவு உடைத் துகில் முடி வலவர் பண்ணினார்
விளக்கவுரை :
2214. கொய் உளைப் புரவிகள் கொளீஇய திண் நுகம்
பெய் கயிறு அமைவரப் பிணித்து முள்ளுறீஇச்
செய் கயிறு ஆய்ந்தன சிலையும் அல்லவும்
கை அமைத்து இளைஞரும் கருவி வீசினார்
விளக்கவுரை :
2215. பறந்து இயல் தருக்கின பரவை ஞாட்பினுள்
கறங்கு எனத் திரிவன கவரி நெற்றிய
பிறந்துழி அறிக எனப் பெரிய நூலவர்
குறங்கு எழுத்து உடையன குதிரை என்பவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2211 - 2215 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books