சீவக சிந்தாமணி 2206 - 2210 of 3145 பாடல்கள்
2206. வான் இடை ஒருவன் தோன்றி மழை என முழங்கிச் சொல்லும்
தேன் உடை அலங்கல் வெள் வேல் சீவகன் என்னும் சிங்கம்
கான் உடை அலங்கல் மார்பின் கட்டியங் காரன் என்னும்
வேல் மிடை சோலை வேழத்து இன் உயிர் விழுங்கும் என்றான்
விளக்கவுரை :
2207. விஞ்சையர் வெம் படை கொண்டு வந்தாய் என
அஞ்சுவலோ அறியாய் எனது ஆற்றலை
வெம் சமம் ஆக்கிடின் வீக்கு அறுத்து உன்னொடு
வஞ்சனை வஞ்சம் அறுத்திடுக என்றான்
விளக்கவுரை :
[ads-post]
2208. சூரியன் காண்டலும் சூரிய காந்தம் அஃது
ஆர் அழல் எங்ஙனம் கான்றிடும் அங்ஙனம்
பேர் இசையான் இசை கேட்டலும் பெய்ம் முகில்
கார் இடி போல் மதனன் கனன்றிட்டான்
விளக்கவுரை :
2209. கால் படையும் களிறும் கலி மாவொடு
நூல் படு தேரும் நொடிப்பினில் பண்ணி
நால் படையும் தொகுத்தான் மக்கள் நச்சிலை
வேல் படை வீரர் ஒர் நூற்றுவர் தொக்கார்
விளக்கவுரை :
2210. வில் திறாலான் வெய்ய தானையும் வீங்குபு
செற்று எழுந்தான் படையும் சின மொய்ம்பொடு
மற்று அவர் மண்டிய வாள் அமர் ஞாட்பினுள்
உற்றவர்க்கு உற்றது எலாம் உரைக்குற்றேன்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2206 - 2210 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books