சீவக சிந்தாமணி 2201 - 2205 of 3145 பாடல்கள்
2201. பொறியின் மேல் ஏறல் தேற்றான் நாணினால் போதல் செய்யான்
நெறியின் வில் ஊன்றி நிற்ப நிழல் மணிப் பன்றி அற்று
மறியுமோ என்று முன்னே மணிமுடி சிதறி வீழ்ந்த
செறிகழல் மன்னர் நக்குத் தீயத் தீ விளைத்துக் கொண்டார்
விளக்கவுரை :
2202. சிரல் தலை மணிகள் வேய்ந்த திருந்து பொன் திகிரிச் செம்பொன்
உரல் தலை உருவப் பன்றி இடம் வலம் திரிய நம்பன்
விரல் தலைப் புட்டில் வீக்கி வெம் சிலை கணையோடு ஏந்திக்
குரல் தலை வண்டு பொங்கக் குப்புற்று நேமி சேர்ந்தான்
விளக்கவுரை :
[ads-post]
2203. ஒள் அழல் வைரப் பூணும் ஒளிர் மணிக் குழையும் மின்ன
ஒள் அழல் கொள்ளி வட்டம் போல் குலாய்ச் சுழலப் பொன் ஞாண்
ஒள் அழல் நேமி நக்க மண்டலம் ஆக நின்றான்
ஒள் அழல் பருதி மேல் ஓர் பருதி நின்று அதனை ஒத்தான்
விளக்கவுரை :
2204. அருந் தவக் கிழமை போல இறாத வில் அறாத நாண்வாய்த்
திருந்தினார் சிந்தை போலும் திண் சரம் சுருக்கி மாறாய்
இருந்தவன் பொறியும் பன்றி இயல் தரும் பொறியும் அற்று ஆங்கு
ஒருங்கு உடன் உதிர எய்தான் ஊழித் தீ உருமொடு ஒப்பான்
விளக்கவுரை :
2205. இலங்கு எயிற்று ஏனம் ஏவுண்டு இரு நிலத்து இடித்து வீழக்
கலங்கு தெண் திரையும் காரும் கடுவளி முழக்கும் ஒப்ப
உலம்புபு முரசம் கொட்டி ஒய் எனச் சேனை ஆர்ப்பக்
குலம் பகர்ந்து அறைந்து கோமான் கோவிந்தன் கூறினானே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2201 - 2205 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books