சீவக சிந்தாமணி 2196 - 2200 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2196 - 2200 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2196. கல்லார் மணிப் பூண் மார்பின் காமன் இவனே என்ன
வில்லார் கடல் அம் தானை வேந்தர் குழாத்துள் தோன்றப்
புல்லான் கண்ணின் நோக்கிப் புலி காண் கலையின் புலம்பி
ஒல்லான் ஒல்லான் ஆகி உயிர் போய் இருந்தான் மாதோ

விளக்கவுரை :

2197. புலி யாப்புறுத்திக் கொண்டேன் போக்கி விட்ட பிழைப்பும்
வலியார் திரள் தோள் மதனன் அவனைப் பிழைத்த பிழைப்பும்
நலியும் என்னை நலியும் என்னக் களிற்றின் உச்சி
இலையார் கடகத் தடக்கை புடைத்து மெய் சோர்ந்து இருந்தான்

விளக்கவுரை :

[ads-post]

2198. மை பூத்து அலர்ந்த மழைக் கண் மாழை மான் நேர் நோக்கின்
கொய் பூங் கோதை மடவார் கொற்றம் கொள்க என்று ஏத்தப்
பெய் பூங் கழலான் வேழத்து இழிந்து பிறை போல் குலாய
செய் பூண் சிலை நாண் எறிந்தான் சேரார் நாள் உக்கனவே

விளக்கவுரை :

2199. கனிபடு மொழியினாள் தன் காரிகை கவற்ற வந்து
குனி சிலை தோற்ற மன்னர் கொங்கு கொப்புளிக்கும் நீலப்
பனி மலர்க் காடு போன்றார் படர் சிலை தொடாத வேந்தர்
இனிதினின் மலர்ந்த ஏர் ஆர் தாமரைக் காடு போன்றார்

விளக்கவுரை :

2200. போர்த் தகல் விசும்பில் வந்து பொறித்திரி பன்றி மூன்றும்
நீர்த்தகப் புணர்ந்த போதில் நெடுந் தகை மூன்றும் அற்றுச்
சூர்த்துடன் வீழ நோக்கிச் சுடு சரம் சிதற வல்லான்
ஓர்த்து ஒன்றே புணர்ப்ப நாடி ஒரு பகல்காறும் நின்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books