சீவக சிந்தாமணி 2191 - 2195 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2191 - 2195 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2191. வில் திறல் விசயன் என்பான் வெம் கணை செவிட்டி நோக்கி
ஒற்றுபு திருத்திக் கைம்மேல் உருட்டுபு நேமி சேர்ந்தாங்கு
உற்ற தன் சிலையின் வாய்ப்பெய்து உடு அமை பகழி வாங்க
இற்று வில் முறிந்து போயிற்று இமைப்பினில் இலங்கித்திட்டான்

விளக்கவுரை :

2192. குண்டலம் இலங்க வாங்கிக் குனி சிலை உறையின் நீக்கிக்
கொண்டு அவன் கொழும் பொன் தாரும் ஆரமும் மிளிர ஏறிக்
கண்டு கோல் நிறைய வாங்கிக் காதுற மிறித லோடும்
விண்டு நாண் அற்றது ஆங்கே விசயனும் வீக்கம் அற்றான்

விளக்கவுரை :

[ads-post]

2193. உளை வனப்பு இருந்த மான் தேர் ஒளி முடி மன்னர் எல்லாம்
வளை வனப்பு இருந்த தோளாள் வருமுலைப் போகம் வேண்டி
விளை தவப் பெருமை ஓரார் வில் திறல் மயங்கி யாரும்
களைகலார் பொறியை ஆங்கு ஓர் ஆறு நாள் கழிந்த அன்றே

விளக்கவுரை :

2194. பனைக் கை யானை மன்னர் பணியப் பைம் பொன் முடியில்
கனைக்கும் சுரும்பு ஆர் மாலை கமழ மதுவும் தேனும்
நனைக்கும் கழலோன் சிறுவன் நாம வெள் வேல் வலவன்
நினைக்கல் ஆகா வகையான் நேரார் உயிர் மேல் எழுந்தான்

விளக்கவுரை :

2195. காரின் முழங்கும் களிறும் கடலின் முழங்கும் தேரும்
போரின் முழங்கும் புரவிக் கடலும் புகை வாள் கடலும்
சீரின் முழங்கும் முரசும் அலறும் சிறு வெண் சங்கும்
நீரின் முழங்க முழங்கும் நீல யானை இவர்ந்தான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books