சீவக சிந்தாமணி 2186 - 2190 of 3145 பாடல்கள்
2186. பில்கித் தேன் ஒழுகும் கோதைப் பிறர் மனையாள்கண் சென்ற
உள்ளத்தை உணர்வின் மிக்கான் ஒழித்திடப் பெயர்ந்ததே போல்
மல்லல் நீர் மகத ராசன் துரந்த கோல் மருள ஓடிப்
புல்லி அப் பொறியை மோந்து புறக் கொடுத்திட்டது அன்றே
விளக்கவுரை :
2187. தென் வரைப் பொதியில் ஆரம் அகிலொடு தேய்த்த தேய்வை
மன் வரை அகலத்து அப்பி மணி வடம் திருவில் வீச
மின் என விட்ட கோலை விழுங்கக் கண்டு அழுங்கி வேர்த்துக்
கல் மலிந்து இலங்கு திண் தோள் கலிங்கர் கோன் மெலிந்து மீண்டான்
விளக்கவுரை :
[ads-post]
2188. கல் மழைப் பொன் குன்று ஏந்திக் கண நிரை அன்று காத்து
மன் உயிர் இன்று காக்கும் வாரண வாசி மன்னன்
மின் இழை சுடர வாங்கி விட்ட கோல் உற்று உறாதாய்
மன் உயிர் நடுங்க நாணி மண் புக்கு மறைந்தது அன்றே
விளக்கவுரை :
2189. எரி கதிர்ப் பைம் பொன் சுண்ணம் இலங்க மெய் முழுதும் அப்பிப்
புரி கழல் அணிந்த நோன் தாள் போதன புரத்து வேந்தன்
அரிதினில் திகிரி ஏறித் திரிந்து கண் கழன்று சோர்ந்து
விரி கதிர்க் கடவுள் போல வெறு நிலத்து ஒலிப்ப வீழ்ந்தான்
விளக்கவுரை :
2190. மலையச் செஞ் சாந்தும் முந்நீர் வலம்புரி ஈன்ற முத்தும்
இலை வைத்த கோதை நல்லார் இளமுலைப் பொறியும் ஆர்ந்து
சிலை வைத்த மார்பின் தென்னன் திருமணிப் பன்றி நோக்கித்
தலை வைத்தது அம்பு தானும் தரணி மேல் பாதம் வைத்தான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2186 - 2190 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books