சீவக சிந்தாமணி 2181 - 2185 of 3145 பாடல்கள்
2181. ஏந்து எழில் ஆகம் சாந்தின் இடு கொடி எழுதிக் காதில்
காய்ந்து எரி செம் பொன் தோடும் கன மணிக் குழையும் மின்ன
வேந்தருள் வினிதை வேந்தன் வெம் சிலை தளர வாங்கி
ஆய்ந்த பொன் பன்றி நெற்றி அருந் துகள் ஆர்ப்ப எய்தான்
விளக்கவுரை :
2182. குடர் தொடர் குருதிக் கோட்டுக் குஞ்சர நகரத்தார் கோன்
சுடர் நுதல் பட்டம் மின்னச் சுரும்பு இமிர் கண்ணி சிந்த
அடர் கதிர்ப் பைம் பொன் பூணும் ஆரமும் அகலத்து ஒல்கப்
படர் சிலை குழைய வாங்கிப் பன்றியைப் பதைப்ப எய்தான்
விளக்கவுரை :
[ads-post]
2183. வார் மதுத் துளிக்கும் மாலை மணி முடித் தொடுத்து நாலக்
கார் மதம் கடந்த வண் கைக் காம்பிலிக் காவல் மன்னன்
ஏர் மதக் கேழல் எய்வான் ஏறலும் பொறியின் ஏறுண்டு
ஆர் மதக் களிற்று வேந்தர்க்கு அரு நகையாக வீழ்ந்தான்
விளக்கவுரை :
2184. முலை வட்டப் பூணும் முத்தும் முள்கலின் கிழிந்து பொல்லா
இலை வட்டத் தாம மார்பின் கோசலத்து இறைவன் எய்த
குலை வட்டக் குருதி அம்பு வானின் மேல் பூசல் உய்ப்பான்
சிலை வட்டம் நீங்கி விண்மேல் செவ்வனே எழுந்தது அன்றே
விளக்கவுரை :
2185. ஊடிய மடந்தை போல உறுசிலை வாங்க வாராது
ஆடு எழு அனைய திண் தோள் அவந்தியன் அதனை நோனான்
நாடு எழுந்து ஆர்ப்ப மற்று அந் நன் சிலை முறித்திட்டு அம்பை
வாடினன் பிடித்து நின்றான் மணமகன் போல நின்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2181 - 2185 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books