சீவக சிந்தாமணி 2176 - 2180 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2176 - 2180 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2176. வீங்கு நீர் விதையத்தார் கோன் கட்டியங்காரன் தன்னோடு
ஆங்கு அவன் ஒருவன் ஆகி அன்பு எனும் அயில் கொள் வாளால்
வாங்கிக் கொண்டு உயிரை உண்பான் வஞ்சத்தால் சூழ்ந்த வண்ணம்
ஓங்கு நீர் ஓத வேலிக்கு உணர யாம் உரைத்தும் அன்றே

விளக்கவுரை :

2177. பெரு மகன் காதல் பாவைப் பித்திகைப் பிணையல் மாலை
ஒரு மகள் நோக்கினாரை உயிரொடும் போகொடாத
திரு மகள் அவட்குப் பாலான் அருந் திரிபன்றி எய்த
அரு மகன் ஆகும் என்று ஆங்கு அணி முரசு அறைவித்தானே

விளக்கவுரை :

[ads-post]

2178. ஆய் மதக் களிறு திண் தேர் அணி மணிப் புரவி அம் பொன்
காய் கதிர்ச் சிவிகை செற்றிக் கலந்தவை நுரைகள் ஆகப்
தோய் மழை உலக வெள்ளம் தொல் நகர்த் தொக்கதே போல்
ஆய் முடி அரச வெள்ளம் அணிநகர் ஈண்டிற்று அன்றே

விளக்கவுரை :

2179. நல்லவள் வனப்பு வாங்க நகை மணி மாலை மார்பர்
வில் அன்றே உவனிப்பாரும் வெம் கணை திருத்துவாரும்
சொல்லுமின் எமக்கும் ஆங்கு ஓர் சிலை தொட நாள் என்பாரும்
பல் சரம் வழங்குவாரும் பரிவு கொள்பவரும் ஆனார்

விளக்கவுரை :

2180. பிறை எயிற்று எரி கண் பேழ்வாய்ப் பெருமயிர்ப் பைம் பென் பன்றி
அறை எனத் திரியும் ஆய் பொன் பூமியின் நிறைந்து மன்னர்
உறு கணை ஒன்றும் வில்லும் உடன் பிடித்து உருவ நேமிப்
பொறி திரிவதனை நோக்கிப் பூ முடி துளக்கி நின்றார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books