சீவக சிந்தாமணி 2171 - 2175 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2171 - 2175 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2171. மன்றல் மா மயில் ஆர்த்து எழ மான் இனம்
கன்றினோடு கலங்கின கால் பெய
வென்றி வேல் படை அஞ்சி வனத்தொடு
குன்று எலாம் குடி போவன போன்றவே

விளக்கவுரை :

2172. படுகண் முழவின் இமிழ் அருவி வரையும் காடும் பல போகி
இடு மண் முழவின் இசை ஓவா ஏமாங்கத நாட்டு எய்திய பின்
நெடு வெண் நிலவின் நெற்றி தோய் நிழலால் செம் பொன் புரிசையே
கடி மண் காவல் கருதினான் கோயில் ஆகக் கருதினான்

விளக்கவுரை :

[ads-post]

2173. போக மகளிர் வலக் கண்கள் துடித்த பொல்லாக் கனாக் கண்டார்
ஆகம் மன்னற்கு ஒளி மழுங்கிற்று அஞ்சத்தக்க குரலினால்
கூகை கோயில் பகல் குழறக் கொற்ற முரசம் பாடு அவிந்து
மாகம் நெய்த்தோர் சொரிந்து எங்கும் மண்ணும் விண்ணும் அதிர்ந்தவே

விளக்கவுரை :

2174. கூற்றம் வந்து புறத்து இறுத்தது அறியான் கொழும் பொன் உலகு ஆள்வான்
வீற்று இங்கு இருந்தேன் என மகிழ்ந்து வென்றி வேழம் இரு நூறும்
காற்றின் பரிக்கும் தேர் நூறும் கடுங் கால் இவுளி ஆயிரமும்
போற்றி விடுத்தான் புனை செம் பொன் படையே அணிந்து புனை பூணான்

விளக்கவுரை :

2175. மன்னன் ஆங்கு ஓர் மத வேழம் வாரி மணாளன் என்பதூஉம்
மின்னும் கொடித் தேர் விசயமும் புரவி பவன வேகமும்
பொன்னின் புனைந்து தான் போக்க நிகழ்வது ஓரான் மகிழ்வு எய்தி
முன் யான் விட்ட இனக் களிற்றின் இரட்டி விடுத்தான் எனப் புகழ்ந்தான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books