சீவக சிந்தாமணி 2166 - 2170 of 3145 பாடல்கள்
2166. சிங்கத்து உரி போர்த்த செழுங் கேடகமும் வாளும்
பொங்கும் அயில் வேலும் பொரு வில்லும் உடன் பரப்பி
மங்குல் இடை மின்னும் மதியும் சுடரும் போல
வெம் கண் தொழில் கூற்றும் அரண் சேர விரிந்தன்றே
விளக்கவுரை :
2167. செம் பொன் நீள் முடித் தேர் மன்னர் மன்னற்குப்
பைம் பொன் ஆழி தொட்டான் படை காட்டினான்
அம் பொன் ஒண் கழலான் அயிராவணம்
வெம்ப ஏறினன் வெல்க என வாழ்த்தினார்
விளக்கவுரை :
[ads-post]
2168. சிறு வெண் சங்கு முரன்றன திண் முரசு
அறையும் மாக்கடல் கார் என ஆர்த்தன
நெறியின் நல்கின புள்ளும் நிமித்தமும்
இறைவன் கண் வலன் ஆடிற்று இயைந்து அரோ
விளக்கவுரை :
2169. மல்லல் யானைக் கறங்கும் மணி ஒலி
அல்லது ஐங் கதி மான் கொழுந் தார் ஒலி
கல் என் ஆர்ப்பு ஒலி மிக்கு ஒளிர் வாள் மினின்
செல்லும் மாக்கடல் போன்றது சேனையே
விளக்கவுரை :
2170. மாலை மாமதி வெண்குடை மல்கிய
கோலக் குஞ்சி நிழல் குளிர் பிச்சமும்
சோலை ஆய்ச் சொரி மும்மதத்தால் நிலம்
பாலை போய் மருதம் பயந்திட்டதே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2166 - 2170 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books