சீவக சிந்தாமணி 2161 - 2165 of 3145 பாடல்கள்
2161. பீலி மா மயில் எருத்து எனப் பெரு வனப்பு உடைய
மாலை மாரட்டத்து அகத்தன வளர் இளங் கிளியே
போலும் மேனிய பொரு கடல் கலத்தின் வந்து இழிந்த
கோல நீர்ப் பவளக் குளம்புடையன குதிரை
விளக்கவுரை :
2162. இன்ன பொங்கு உளைப் புரவி பண் உறுத்தன இயல் தேர்
பொன்னும் வெள்ளியும் மணியினும் பொலிந்து வெண் மதியம்
தன்னை ஊர் கொண்ட தகையன தொகை சொலின் அறு நூறு
என்னும் ஈறு உடை இருபதின் ஆயிரம் இறையே
விளக்கவுரை :
[ads-post]
2163. நொச்சி மா மலர் நிறத்தன நொடி வரும் முந்நீர்
உச்சி மாக் கதிர் போல் சுடும் ஒளிதிகழ் அயில் வாள்
எச்சத்து அல்லவும் எறி படை பயின்று தம் ஒன்னார்
நிச்சம் கூற்றினுக்கு இடுபவர் தேர் மிசை அவரே
விளக்கவுரை :
2164. எயிற்றுப் படை ஆண்மையினின் இடிக்கும் புலி ஒப்பார்
பயிற்றிய வில் வாள் பணிக்கும் வேலொடு உடன் வல்லார்
துயிற்றிய பல் கேள்வியினர் தூற்றிக் கொளப்பட்டர்
அயில் துப்பு அடையார்கள் மத யானை கதன் அறுப்பார்
விளக்கவுரை :
2165. காலனொடு சூழ்ந்த கடு நோய்களையும் ஒப்பார்
ஆலும் கடல் தூர்த்தல் மலை அகழ்தல் இவை வல்லார்
ஞாலம் அறி ஆண் தொழிலர் நான்கு இலக்கம் உள்ளார்
மேலும் நுமரால் உரிமையுள் சிறப்புப் பெற்றார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2161 - 2165 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books