சீவக சிந்தாமணி 2156 - 2160 of 3145 பாடல்கள்
2156. குந்தமே அயில்வாள் குனிசிலை மூன்றும் குறைவிலார் கூற்றொடும் பொருவார்
அந்தரம் ஆறா யானை கொண்டு ஏறப் பறக்க எனில் பறந்திடும் திறலார்
முந்து அமர் தம்முள் முழுமெயும் இரும்பு மேய்ந்திட வெம் சமம் விளைத்தார்
கொந்து அழல் அஞ்சாக் குஞ்சரம் இவர்ந்தார் கோடியே விருத்தியா உடையார்
விளக்கவுரை :
2157. குங்கும நறு நீர் பந்தி நின்று ஆடும் குதிரை ஆறு ஆயிரத்து இரட்டி
பொங்கு வெண் மயிர் சூழ் பொன் படை பொலிந்த அறுபதின் ஆயிரம் புரவி
வெம் கணை தவிர்ப்ப வெள்ளி வெண் படைய வாய்விடின் நிலவரை நில்லாப்
பைங்கதிர்க் கொட்டைக் கவரி சூழ்ந்து அணிந்த பகரின் அத் தொகையன பாய்மா
விளக்கவுரை :
[ads-post]
2158. வேய்நிறக் கரும்பின் வெண் நிறப் பூப்போல் மிடைந்து ஒளிர் குந்தமும் வாளும்
தோம் நிலை அரவின் தோற்றமே போலும் சிலைகளும் பிறகளும் துறை போய்
ஊனம் ஒன்று இல்லார் உயர் குடிப் பிறந்தார் ஆயிரம் அடுகளம் கண்டார்
பால் நிலாப் பூணார் படைத் தொழில் கலிமாப் பண் உறுத்து ஏறினார் அவரே
விளக்கவுரை :
2159. தறுகண் ஆண்மைய தாமரை நிறத்தன தகைசால்
மறு இல் வான் குளம்பு உடையன மாளவத்து அகத்த
பறையின் ஆலுவ படு சினை நாவலின் கனிபோல்
குறைவு இல் கோலத்த குளிர் புனல் சிந்துவின் கரைய
விளக்கவுரை :
2160. பார சூரவம் பல்லவம் எனும் பதிப் பிறந்த
வீர ஆற்றல விளை கடுந் தேறலின் நிறத்த
பாரில் தேர் செலின் பழி பெரிது உடைத்து என நாணிச்
சோரும் வார் புயல் துளங்க விண் புகுவன துரகம்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2156 - 2160 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books