சீவக சிந்தாமணி 2151 - 2155 of 3145 பாடல்கள்
2151. விண்டவர் உடலம் கீறிச் சுளித்து நின்று அழலும் வேழம்
ஒண் கொடி உருவத் திண்தேர் ஒளி மயிர்ப் புரவி பண்ணி
வண் கழல் அணிந்து மள்ளர் வாள் வலம் பிடித்து நாளைத்
தெண் திரைப் பரப்பு நாணத் திருநகர்த் தொகுக என்றான்
விளக்கவுரை :
2152. ஏற்று உரி போர்த்த வள் வார் இடி முரசு அறைந்த பின் நாள்
காற்று எறி கடலின் சங்கும் முழவமும் முரசும் ஆர்ப்பக்
கூற்று உடன்று அனைய தானை கொழு நிலம் நெளிய ஈண்டிப்
பால் கடல் பரப்பின் வெள் வாள் சுடர் ஒளி பரந்த அன்றே
விளக்கவுரை :
[ads-post]
2153. புதை இருள் இரியப் பொங்கிக் குங்குமக் கதிர்கள் ஓக்கி
உதையத்தின் நெற்றி சேர்ந்த ஒண் சுடர்ப் பருதி போலச்
சுதை ஒளி மாடத்து உச்சி வெண்குடை நீழல் தோன்றி
விதையத்தார் வென்றி வேந்தன் விழுப் படை காணும் அன்றே
விளக்கவுரை :
2154. அரும் பனைத் தடக்கை அபரகாத்திரம் வாய் வால் எயிறு ஐந்தினும் கொல்வ
கருங் கடல் சங்கும் கறந்த ஆன் பாலும் கனற்றிய காலுகிர் உடைய
பெரும் புலி முழக்கின் மாறு எதிர் முழங்கிப் பெருவரை கீண்டிடும் திறல
திருந்தி ஏழுறுப்பும் திண் நிலம் தோய்வ தீ உமிழ் தறுகணின் சிறந்த
விளக்கவுரை :
2155. கவிழ் மணிப் புடைய கண் நிழல் நாறின் கனன்று தம் நிழலொடு மலைவ
அவிழ் புயல் மேகம் அனைய மும்மதத்த அறுபதிற்று அறுபதாம் நாகம்
புகழ் பருந்து ஆர்ப்பப் பூ மதம் பொழிவான் நின்றன இராயிரம் கவுள் வண்டு
இகழ் மதம் செறித்த இராயிரத்து ஐந் நூறு இளையவும் அத் துணைக் களிறே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2151 - 2155 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books