சீவக சிந்தாமணி 2146 - 2150 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2146 - 2150 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2146. நூற்றுவர் பாகர் தம்மைப் பிளந்து உயிர் உண்டது என்னும்
மாற்றத்தைக் கேட்டுச் சென்று மதக் களிறு அடக்கி மேல் கொண்டு
ஆற்றல் அம் கந்து சேர்த்தி யாப்பு உற வீக்கும் போழ்தில்
கூற்று என முழங்கி வீழ்த்துக் கொல்லக் கோல் இளகிற்று அன்றே

விளக்கவுரை :

2147. தனக்கு யான் உயிரும் ஈவேன் தான் வரப் பழியும் நீங்கும்
எனக்கு இனி இறைவன் தானே இரு நிலக் கிழமை வேண்டி
நினைத்துத் தான் நெடிதல் செல்லாது என் சொலே தெளிந்து நொய்தா
சினக் களி யானை மன்னன் வருக எனச் செப்பினானே

விளக்கவுரை :

[ads-post]

2148. ஒலையுள் பொருளைக் கேட்டே ஒள் எயிறு இலங்கு நக்கக்
காலனை அளியன் தானே கையினால் விளிக்கும் என்னா
நூல் வலீர் இவனைக் கொல்லும் நுண் மதிச் சூழ்ச்சி ஈதே
போல்வது ஒன்று இல்லை என்றான் புனை மணிப் பொன் செய் பூணான்

விளக்கவுரை :

2149. கள்ளத்தால் நம்மைக் கொல்லக் கருதினான் நாமும் தன்னைக்
கள்ளத்தால் உயிரை உண்ணக் கருதினேம் இதனை யாரும்
உள்ளத்தால் உமிழ வேண்டா உறு படை வந்து கூட
வள்ளுவார் முரசம் மூதூர் அறைக என அருளினானே

விளக்கவுரை :

2150. கட்டியங் காரனோடு காவலன் ஒருவன் ஆனான்
விட்டு நீர் நெல்லும் பொன்னும் வழங்குமின் விளைவ கூறின்
ஒட்டலன் இறைவன் சொன்னீர் நா நும அல்ல என்னக்
கொட்டினான் தடம் கண் வள் வார்க் குளிறு இடி முரசம் அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books