சீவக சிந்தாமணி 2141 - 2145 of 3145 பாடல்கள்
2141. உலந்த நாள் அவர்க்குத் தோன்றாது ஒளிக்கும் மீன் குளிக்கும் கற்பின்
புலந்த வேல் நெடுங் கண் செவ்வாய்ப் புதவி நாள் பயந்த நம்பி
சிலம்பும் நீர்க் கடல் அம் தானைச் சீதத்தற்கு அரசு நாட்டிக்
குலம் தரு கொற்ற வேலான் கொடி நகர் காக்க என்றான்
விளக்கவுரை :
2142. மாற்றவன் ஒற்றர் ஒற்றா வகையினில் மறைய நம்பிக்கு
ஆற்றின தோழர்க்கு எல்லாம் அணிகலம் அடிசில் ஆடை
வேற்றுமை இன்றி வேண்டு ஊட்டு அமைத்தனன் அருளி இப்பால்
ஏற்று உரி முரசம் நாண எறிதிரை முழக்கின் சொன்னான்
விளக்கவுரை :
[ads-post]
2143. கட்டியங் காரன் நம்மைக் காண்பதே கருமம் ஆக
ஓட்டித்தான் விடுத்த ஓலை உள பொருள் உரைமின் என்னத்
தொட்டு மேல் பொறியை நீக்கி மன்னனைத் தொழுது தோன்ற
விட்டு அலர் நாகப் பைந்தார் விரிசிகன் கூறும் அன்றே
விளக்கவுரை :
2144. விதையத்தார் வேந்தன் காண்க கட்டியங் காரன் ஓலை
புதைய இப் பொழிலைப் போர்த்து ஓர் பொய்ப் பழி பரந்தது என்மேல்
கதை எனக் கருதல் செய்யான் மெய் எனத் தானும் கொண்டான்
சிதைய என் நெஞ்சம் போழ்ந்து தெளிப்பினும் தெளிநர் யாரே
விளக்கவுரை :
2145. படு மணிப் பைம் பொன் சூழிப் பகட்டு இனம் இரியப் பாய்ந்து
கொடி நெடுந் தேர்கள் நூறிக் கொய் உளை மாக்கள் குத்தி
இடு கொடி அணிந்த மார்பர் இரு விசும்பு ஏறச் சீறி
அடு களிற்று அசனி வேகம் அலமர அதனை நோனான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2141 - 2145 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books