சீவக சிந்தாமணி 2136 - 2140 of 3145 பாடல்கள்
2136. பொன் அம் குவட்டின் பொலிவு எய்தித் திரண்ட திண் தோள்
மன்னன் மகிழ்ந்து மருமானை விடாது புல்லித்
தன் அன்பு கூரத் தடம் தாமரைச் செங் கண் முத்தம்
மின்னும் மணிப்பூண் விரை மார்ப நனைப்ப நின்றான்
விளக்கவுரை :
2137. ஆனாது வேந்தன் கலுழ்ந்தான் எனக் கோயில் எல்லாம்
தானாதும் இன்றி மயங்கித் தடம் கண் பெய் மாரி
தேன் ஆர் மலர் ஈர்த்து ஒழுகச் சிலம்பில் சிலம்பும்
கான் ஆர் மயிலின் கணம் போல் கலுழ்வுற்றது அன்றே
விளக்கவுரை :
[ads-post]
2138. பகை நரம்பு இசையும் கேளாப் பைங் கதிர்ப் பசும் பொன் கோயில்
வகை நலம் வாடி எங்கும் அழு குரல் மயங்கி முந்நீர்
அக மடை திறந்ததே போல் அலறக் கோக்கு இளைய நங்கை
மிகை நலத் தேவி தானே விலாவணை நீக்கினாளே
விளக்கவுரை :
2139. பல் கதிர் மணியும் பொன்னும் பவழமும் குயிற்றிச் செய்த
செல்வப் பொன் கிடுகு சூழ்ந்த சித்திர கூடம் எங்கும்
மல்கு பூந் தாமம் தாழ்ந்து மணிப் புகை கமழ வேந்தன்
வெல் புகழ் பரவ மாதோ விதி உளி எய்தினானே
விளக்கவுரை :
2140. எரி மணி அடைப்பை செம் பொன் படியகம் இலங்கு பொன்வாள்
கருமணி முகடு வேய்ந்த கஞ்சனை கவரி கொண்ட
வருமுலை மகளிர் வைத்து வான் தவிசு அடுத்து நீங்கப்
பெருமகன் எண்ணம் கொள்வான் அமைச்சரோடு ஏறினானே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2136 - 2140 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books