சீவக சிந்தாமணி 2131 - 2135 of 3145 பாடல்கள்
2131. எரிக் குழாம் சுடரும் வை வேல் ஏந்தலைக் கண்டு கோயில்
திருக் குழாம் அனைய பட்டத் தேவியர் மகிழ்ந்து செய்ய
வரிக் குழாம் நெடுங் கண் ஆரக் கொப்புளித்து உமிழ அம் பூ
விரைக் குழாம் மாலைத் தேனும் வண்டும் உண்டு ஒழுக நின்றார்
விளக்கவுரை :
2132. அலங்கல் தாது அவிழ்ந்து சோர அல்குல் பொன் தோரை மின்னச்
சிலம்பின்மேல் பஞ்சி ஆர்ந்த சீறடி வலத்தது ஊன்றி
நலம் துறை போய நங்கை தோழியைப் புல்லி நின்றாள்
இலங்கு ஒளி மணித் தொத்து ஈன்ற ஏந்து பொன் கொடியோடு ஒப்பாள்
விளக்கவுரை :
[ads-post]
2133. தாமரைப் போதில் பூத்த தண் நறுங் குவளைப் பூப் போல்
காமரு முகத்தில் பூத்த கருமழைத் தடம் கண் தம்மால்
தே மலர் மார்பினானை நோக்கினாள் செல்வன் மற்று அப்
பூ மலர்க் கோதை நெஞ்சம் மூழ்கிப் புக்கு ஒளித்திட்டானே
விளக்கவுரை :
2134. விண்ணாறு செல்வார் மனம் பேது உறப் போந்து வீங்கிப்
பண்ணாறு சொல்லாள் முலை பாரித்த என்று நோக்கக்
கண்ணாறு சென்ற களி ஐங் கணைக் காமன் அன்ன
புணணாறு வேலான் மனம் மூழ்கினள் பொன் அனாளே
விளக்கவுரை :
2135. மைதோய் வரையின் இழியும் புலி போல மைந்தன்
பெய் தாம மாலைப் பிடியின் இழிந்து ஏகி மன்னர்
கொய் தாம மாலைக் கொழும் பொன்முடி தேய்த்து இலங்கும்
செய்பூங் கழலைத் தொழுதான் சென்னி சேர்த்தினானே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2131 - 2135 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books