சீவக சிந்தாமணி 2126 - 2130 of 3145 பாடல்கள்
2126. மயிர் வாய் சிறு கண் பெருஞ் செவி மாத் தாள்
செயிர் தீர் திரள் கைச் சிறு பிடி கேள்வன்
அயிரா வணத்தொடு சூள் உறும் ஐயன்
உயிர் காவலன் கொண்டு உதவ நில் என்பார்
விளக்கவுரை :
2127. கருனைக் கவளம் தருதும் கமழ் தார்
அருமை அழகிற்கு அரசனை நாளைத்
திரு மலி வீதி எம் சேரிக் கொணர்மோ
எரி மணி மாலை இளம்பிடி என்பார்
விளக்கவுரை :
[ads-post]
2128. என்னோர் மருங்கினும் ஏத்தி எரிமணிப்
பொன் ஆர் கலையினர் பொன் பூஞ் சிலம்பினர்
மின் ஆர் குழையினர் கோதையர் வீதியுள்
மன்ன குமரனை வாழ்த்தி மகிழ்ந்தார்
விளக்கவுரை :
2129. விளங்கு பால் கடலில் பொங்கி வெண் திரை எழுவவே போல்
துளங்கு ஒளி மாடத்து உச்சித் துகில் கொடி நுடங்கும் வீதி
உளம் கழித்து உருவப் பைந்தார் மன்னவன் கோவில் சேர்ந்தான்
இளங் கதிர்ப் பருதி பௌவத்து இறு வரை இருந்தது ஒத்தான்
விளக்கவுரை :
2130. இழை ஒளி பரந்த கோயிலின் இன மலர்க் குவளைப் பொன் பூ
விழை தகு கமல வட்டத்து இடை விராய்ப் பூத்தவே போல்
குழை ஒளி முகமும் கோலக் கொழுங் கயல் கண்ணும் தோன்ற
மழை மின்னுக் குழாத்தின் மாலை மங்கையர் மயங்கி நின்றார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2126 - 2130 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books