சீவக சிந்தாமணி 2121 - 2125 of 3145 பாடல்கள்
2121. தே மலர் அம் கண் திருவே புகுதக
மா மலர்க் கோதை மணாளன் புகுதக
காமன் புகுதக காளை புகுதக
நாம எழில் விஞ்சை நம்பி புகுதக
விளக்கவுரை :
2122. மின் தோய் வரை கொன்ற வேலோன் புகுதக
இன்தேன் கமழ் தார் இயக்கன் புகுதக
வென்றோன் புகுதக வீரன் புகுதக
என்றே நகரம் எதிர் கொண்டதுவே
விளக்கவுரை :
[ads-post]
2123. இடி நறுஞ் சுண்ணம் சிதறி எச்சாரும்
கடி கமழ் மாலையும் கண்ணியும் சிந்திக்
துடி அடு நுண் இடைத் தொண்டை அம் செவ்வாய்
வடி அடு கண்ணியர் வாழ்த்துபு நிற்பார்
விளக்கவுரை :
2124. சுரும்பு இமிர் மாலை தொழுவனர் நீட்டி
இரும் பிடி நின் நடை கற்ற எமக்கு
விரும்பினையாய் விடின் மெல்ல நடமோ
கருங் கணில் காமனைக் காண மற்று என்பார்
விளக்கவுரை :
2125. மட நடை பெண்மை வனப்பு என்பது ஓராய்
கடு நடை கற்றாய் கணவன் இழப்பாய்
பிடி அலை பாவி எனப் பூண் பிறழ்ந்து
புடை முலை விம்மப் புலந்தனர் நிற்பார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2121 - 2125 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books