சீவக சிந்தாமணி 2116 - 2120 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2116 - 2120 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2116. கருங் கண் இளமுலை கச்சற வீக்கி
மருங்குல் தளர மழை மருள் மாடம்
நெருங்க இறை கொண்ட நேர் இழையார் தம்
பெருங் கண் அலமரும் பெற்றித்து ஒரு பால்

விளக்கவுரை :

2117. மின்னு குழையினர் கோதையர் மின் உயர்
பொன் வரை மாடம் புதையப் பொறி மயில்
துன்னிய தோகைக் குழாம் எனத் தொக்கவர்
மன்னிய கோலம் மலிந்தது ஒரு பால்

விளக்கவுரை :

[ads-post]

2118. பாடல் மகளிரும் பல்கலை ஏந்து அல்குல்
ஆடல் மகளிரும் ஆவண வீதிதொறும்
ஓட உதிர்ந்த அணிகலம் உக்கவை
நீடு இருள் போழும் நிலைமத்து ஒருபால்

விளக்கவுரை :

2119. கோதையும் தாரும் பிணங்கக் கொடுங் குழைக்
காதல் மகளிரும் மைந்தரும் காணிய
வீதியும் மேலும் மிடைந்து மிடை மலர்த்
தாது அடுத்து எங்கும் தவிசு ஒத்ததுவே

விளக்கவுரை :

2120. மானக் கவரி மணி வண்டு அகற்ற அங்கு
ஆனை எருத்தத்து அமர குமரனின்
சேனைக் கடல் இடைச் செல்வனைக் கண்டு உவந்து
ஏனையவரும் எடுத்து உரைக்கின்றார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books