சீவக சிந்தாமணி 2111 - 2115 of 3145 பாடல்கள்
2111. பொரு மத யானைப் புணர் மருப்பு ஏய்ப்பப் பொன் சுமந்து ஏந்திய முலையார்
எரி மலர்ச் செவ்வாய் திறந்து தேன் ஊற ஏத்துவார் பூக்கள் தூய்த் தொழுவார்
வருகுலைக் கமுகும் வாழையும் நடுவார் வரை உமிழ் ஆவி போல் மாடத்து
அருநறும் புகையும் ஏந்துவார் ஊர் தோறு அமரரதம் உலகம் ஒத்ததுவே
விளக்கவுரை :
2112. பாடு இன் அருவி பயம் கெழு மாமலை
மாட நகரத்து வாயிலும் கோயிலும்
ஆடு அம்பலமும் அரங்கமும் சாலையும்
சேடனைக் காணிய சென்று தொக்கதுவே
விளக்கவுரை :
[ads-post]
2113. பல் கதிர் ஆரமும் பூணும் பருமித்துக்
கொல் சின வெம் தொழில் கோடு ஏந்து இளமுலை
நல் எழில் மங்கையர் நல் நுதல் சூட்டிய
வெல் கதிர்ப் பட்டம் விளங்கிற்று ஒருபால்
விளக்கவுரை :
2114. சுண்ணமும் சூட்டும் சொரிந்து வார் குழல்
கண்ணி மகாரோடு கால் சிலம்பு ஆர்த்து எழ
அண்ணலைக் காணிய ஆர்வத்தின் போதரும்
வண்ண மகளிர் வனப்பிற்று ஒருபால்
விளக்கவுரை :
2115. எதிர் நலப் பூங்கொடி எள்ளிய சாயல்
கதிர் நல மங்கையர் கால் தொடர்ந்து ஓட
முதிரா இளமுலை முத்தொடு பொங்க
அதிர் அரிக் கிண்கிணி ஆர்க்கும் ஒரு பால்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2111 - 2115 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books