சீவக சிந்தாமணி 2106 - 2110 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2106 - 2110 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2106. ஊன் தலைப் பொடித்த ஆங்கு அனைய செஞ் சூட்டின் ஒளி மயிர் வாரணம் ஒருங்கே
கான்றபூங் கடம்பின் கவட்டு இடை வளை வாய்ப் பருந்தொடு கவர்குரல் பயிற்றும்
ஆன்ற வெம்பாலை அழல் மிதித்து அன்ன அருஞ் சுரம்சுடர் மறை பொழுதின்
ஊன்றினார் பாய் மா ஒளி மதிக் கதிர் போல் சந்தனம் ஒருங்கு மெய் புதைத்தே

விளக்கவுரை :

2107. நிலை இலா உலகில் நின்ற வண் புகழை வேட்டவன் நிதியமே போன்றும்
இலை குலாம் பைம் பூண் இள முலைத் தூதின் இன் கனித் தொண்டை அம் துவர்வாய்க
கலை வலார் நெஞ்சில் காமமே போன்றும் கடவுளர வெகுளியே போன்றும்
உலைவு இலார் நில்லாது ஒரு பகலுள்ளே உருப்புஅவிர் வெம் சுரம் கடந்தார்

விளக்கவுரை :


[ads-post]

2108. புதுக் கலம் போலும் பூங் கனி ஆலும் பொன்இணர்ப் பிண்டியும் பொருந்தி
மதுக் கலந்து ஊழ்த்துச் சிலம்பி விழ்வன போல் மலர்சொரி வகுளமும் மயங்கிக்
கதிர்த்த தண் பூணி கம்புள் தாழ் பீலிக் கனைகுரல் நாரை வண்டானம்
எதிர்த்த தண் புனல் சூழ் இன் நதிக் கரைமேல் இளையவர் அயா உயிர்த்து எழுந்தார்

விளக்கவுரை :

2109. அள்ளிலைப் பலவின் அளிந்து வீழ் சுளையும் கனிந்து வீழ் வாழையின் பழனும்
புள்ளிவாழ் அலவன் பொறி வரிக் கமஞ் சுழ்ல் ஞெண்டினுக்கு உய்த்து நோய் தணிப்பான்
பள்ளி வாய் நந்தும் ஆமையும் பணித்துப் பல் மலர் வழிபடக் குறைக்கும்
வெள்ள நீர்ப் படப்பை விதையம் வந்து அடைந்தே வேந்தனுக்கு உணர்த்த முன் விடுத்தார்

விளக்கவுரை :

2110. வீட்டு இடம் தோறும் வில்லக விரல் போல் பொருந்தி நின்று ஒருங்கு எதிர் கொள்க என்று
ஏட்டின் மேல் தீட்டித் திரு எழுத்து இட்டு ஆங்கு இறைவனும் தமர்களைப் பணிப்ப
நாட்டகத்து அமிர்தும் நளிகடல் அமிர்தும் நல்வரை அமிர்தமும் அல்லாக்
காட்டு அகத்து அமிர்தும் காண் வரக் குவவிக் கண் அகன் புறவு எதிர் கொண்டார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books