சீவக சிந்தாமணி 2101 - 2105 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2101 - 2105 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2101. இனையவள் மகிழ்வ கூறி இன்துயில் அமர்ந்து பின் நாள்
விளை பொருள் ஆய எல்லாம் தாதைக்கே வேறு கூறிக்
கிளையவர் சூழ வாமான் வாணிகன் ஆகிக் கேடில்
தளை அவிழ் தாம மார்பன் தன் நகர் நீங்கினானே

விளக்கவுரை :

மண்மகள் இலம்பகம்

2102. குடம் புரை செருத்தல் குவளைமேய் கயவாய்க் குவி முலைப் படர் மருப்பு எருமை
நடந்த வாய் எல்லாம் நறு மலர் மரையின் நாகு இலைச் சொரிந்த அம் தீம்பால்
தடம் சிறை அன்னம் குருகொடு நாரைப் பார்ப்பு இனம் ஓம்பு தண் மருதம்
மடங்கல் போல் திறலார் மா மணி கறங்க வளவயல் புள் எழக் கழிந்தார்

விளக்கவுரை :

[ads-post]

2103. புரிவளை அலறிப் பூசல் இட்டு ஈன்ற பொழிகதிர் நித்திலம் உழக்கி
வரிவளை சூழும் வலம்புரி இனத்துள் சலஞ்சலம் மேய்வன நோக்கி
அரிது உணர் அன்னம் பெடை எனத் தழுவி அன்மையின் அலமரல் எய்தித்
திரிதரு நோக்கம் தீது இலார் நோக்கி நெய்தலும் கைவலத்து ஒழிந்தார்

விளக்கவுரை :

2104. நல்லவர் போல் மலர் பருகும் மோட்டு இள முல்லை மொய்ம் மலர்க் கானம்
முருகு வந்து எதிர் கொள நடந்தார் கோட்டு இளங் கலையும் கூடும் மென் பிணையும்
கொழுங் கதிர் மணிவிளக்கு எறிப்பச் சேட்டு இளங் கொன்றைத் திரு நிழல் துஞ்சச்
செம்பொறி வண்டு அவற்று அயலே நாட்டு இளம் படியார் நகை முகம் பருகும்

விளக்கவுரை :

2105. குழவி வெண் திங்கள் கோட்டின் மேல் பாயக் குளிர்புனல் சடை விரித்து ஏற்கும்
அழல் அவிர் சூலத்து அண்ணலே போல அருவிநீர் மருப்பினின் எறியக்
கழை வளர் குன்றில் களிறு நின்று ஆடும் கடி நறும் சந்தனச் சாரல்
இழை வளர் முலையார் சாயல் போல் தோகை இறை கொள் பூங் குறிஞ்சியும் இறந்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books