சீவக சிந்தாமணி 2096 - 2100 of 3145 பாடல்கள்
2096. ஒற்றரும் உணர்தல் இன்றி உரை அவித்து உறுப்பினாலே
சுற்றத்தார்க்கு உரைப்ப ஈண்டித் தொக்குடன் தழுவிக் கொள்வார்
எற்றுவார் இனைந்து சோர்வார் நம்பியோ நம்பி என்னா
உற்று உடன்று அழுத கண்ணீர் கால் அலைத்து ஒழுகிற்று அன்றே
விளக்கவுரை :
2097. கந்துகன் கழறக் கல் என் கடல் திரை அவிந்த வண்ணம்
வந்தவர் புலம்பு நீங்க மறை புறப்படும் என்று எண்ணி
எந்தை தான் இறந்த நாள் இன்று என நகர் இயம்பி யாரும்
அந்தம் இல் உவகை தன்னால் அகம் குளிர்ப்பு எய்தினாரே
விளக்கவுரை :
[ads-post]
2098. செங் கயல் மழைக் கண் செவ்வாய்த் தந்தையும் மகிழ்ந்து தீம் சொல்
எங்கையைச் சென்று காண்மின் அடிகள் என்று இரந்து கூற
மங்கல வகையில் சேர்ந்து மதுத் துளி அறாத மாலை
கொங்கு அலர் கண்ணி சேர்த்திக் குங்குமம் எழுதினானே
விளக்கவுரை :
2099. தீவினை உடைய என்னைத் தீண்டன்மின் அடிகள் வேண்டா
பாவியேன் என்று நொந்து பரிந்து அழுது உருகி நையக்
காவி அம் கண்ணி ஒன்றும் கவலல் யான் உய்ந்தது எல்லாம்
நாவியே நாறும் மேனி நங்கை நின் தவத்தின் என்றான்
விளக்கவுரை :
2100. அன்ன மென் நடையும் நோக்கும் சாயலும் அணியும் ஏரும்
மின்னின் நுண் நுசுப்பும் வெய்ய முலைகளும் முகமும் தோன்ற
என் மனத்து எழுதப்பட்டாய் ஆயினும் அரிவை கேளாய்
உன்னை யான் பிரிந்த நாள் ஓர் ஊழியே போன்றது என்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2096 - 2100 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books