சீவக சிந்தாமணி 2091 - 2095 of 3145 பாடல்கள்
2091. கடிப்பிணை காது சேர்த்திச் சிகழிகைக் காதம் நாறத்
தொடுத்து அலர் மாலை சூட்டிக் கிம்புரி முத்தம் மென் தோள்
அடுத்து அணிந்து ஆகம் சாந்தின் அணி பெற எழுதி அல்குல்
உடுத்த பொன் கலாபம் தைவந்து ஒளிவளை திருத்தினானே
விளக்கவுரை :
2092. இலங்கு வெள் அருவிக் குன்றத்து எழுந்த தண் தகரச் செந்தீ
நலம் கிளர் அகிலும் தேனும் கட்டியும் நன்கு கூட்டிப்
புலம்பு அற வளர்த்த அம்மென் பூம் புகை அமளி அங்கண்
விலங்கு அரசு அனைய காளை வெள்வளைக்கு இதனைச் சொன்னான்
விளக்கவுரை :
[ads-post]
2093. கருமம் நீ கவல வேண்டா கயல் கண்ணாய் பிரிவல் சில் நாள்
அருமை நின் கவினைத் தாங்கல் அது பொருள் என்று கூறப்
பெரும நீ வேண்டிற்று அல்லால் வேண்டுவ பிறிது ஒன்று உண்டோ
ஒருமை நின் மனத்தின் சென்றேன் உவப்பதே உவப்பது என்றாள்
விளக்கவுரை :
2094. நாணொடு மிடைந்த தேம் கொள் நடுக்குஉறு கிளவி கேட்டே
பூண் வடுப் பொறிப்பப் புல்லிப் புனை நலம் புலம்ப வைகேன்
தேன் மிடை கோதை என்று திருமகன் எழுந்து போகி
வாள் மிடை தோழர் சூழத் தன் மனை மகிழ்ந்து புக்கான்
விளக்கவுரை :
2095. புரவியும் களிறும் நோக்கிப் பொன் நெடுந் தேரும் நோக்கி
இரவினும் பகலும் ஓவாது என் மகன் யாண்டையான் என்று
அழுத கண்ணீரினாலே கை கழீஇ அவலிக்கின்ற
மெழுகு எரிமுகந்தது ஒக்கும் தாய் மெலிவு அகற்றினானே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2091 - 2095 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books