சீவக சிந்தாமணி 2086 - 2090 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2086 - 2090 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2086. நுண் துகில் நெகிழ்ந்த அல்குல் மணி பரந்து இமைப்ப நொந்து
கண்களை இடுகக் கோட்டிக் காமத்தின் செயிர்த்து நோக்கிக்
குண்டலம் இலங்கக் கோதை கூந்தலோடு அவிழ்ந்து சோர
ஒண் தொடி ஊடி நின்றாள் ஒளிமணிப் பூங் கொம்பு ஒப்பாள்

விளக்கவுரை :

2087. கிழவனாய்ப் பாடி வந்து என் கீழ்ச் சிறை இருப்பக் கண்டேன்
எழுதிய பாவை நோக்கி இமை அவித்து இருப்பக் கண்டேன்
ஒழிக இக் காமம் ஓர் ஊர் இரண்டு அஃகம் ஆயிற்று என்று ஆங்கு
அழுத கண்ணீர்கள் மைந்தன் ஆவி போழ்ந்திட்ட அன்றே

விளக்கவுரை :

[ads-post]

2088. அலங்கல் தாது அவிழ அம் செஞ் சீறடி அணிந்த அம் பூஞ்
சிலம்பின் மேல் சென்னி சேர்த்திச் சிறியவர் செய்த தீமை
புலம்பலர் பொறுப்பர் அன்றே பெரியவர் என்று கூறி
இலங்கு வேல் கண்ணி ஊடல் இளையவன் நீக்கினானே

விளக்கவுரை :

2089. யாழ் கொன்ற கிளவியாள் தன் அமிழ்து உறழ் புலவி நீக்கிக்
காழ் இன்றிக் கனிந்த காமக் கொழுங் கனி நுகர்ந்து காதல்
தாழ்கின்ற தாம மார்பன் தையலோடு ஆடி விள்ளான்
ஊழ் சென்ற மதியம் வெய்யோன் ஓட்டி ஒன்று ஆயது ஒத்தான்

விளக்கவுரை :

2090. பச்சிலைப் பட்டும் முத்தும் பவளமும் இமைக்கும் அல்குல்
நச்சிலை வேல் கண் மாதர் நகை முக முறுவல் மாந்தி
இச்சையும் குறிப்பும் நோக்கி எய்வதே கருமம் ஆகக்
கைச் சிலை கணையோடு ஏந்திக் காமன் இக் கடையைக் காப்பான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books