சீவக சிந்தாமணி 2081 - 2085 of 3145 பாடல்கள்
2081. பொன் வரை பொருத யானைப் புணர் மருப்பு அனைய ஆகித்
தென்வரைச் சாந்து மூழ்கித் திரள் வடம் சுமந்து வீங்கி
மின் வளர் மருங்குல் செற்ற வெம் முலை மணிக்கண் சேப்பத்
தொல் நலம் பருகித் தோன்றல் துறக்கம் புக்கவர்கள் ஒத்தான்
விளக்கவுரை :
2082. வரிக் கழல் குருசில் மார்பும் மடந்தை வெம் முலையும் தம்முள்
செருச் செய்து திளைத்துப் போரில் சிலம்பு ஒலி கலந்த பாணி
அரிப் பறை அனுங்க ஆர்க்கும் மேகலைக் குரலோடு ஈண்டிப்
புரிக் குழல் புலம்ப வைகிப் பூ அணை விடுக்கலானே
விளக்கவுரை :
[ads-post]
2083. மணி இயல் வள்ளத்து ஏந்த மது மகிழ்ந்து அனந்தர் கூர
அணி மலர்க் குவளைப் பைம் போது ஒரு கையின் அருளி அம்பொன்
பிணை அனாள் அருகு சேரின் பேது உறு நுசுப்பு என்று எண்ணித்
துணை அமை தோள்கள் தம்மால் தோன்றல்தான் புல்லினானே
விளக்கவுரை :
2084. மல்லல் அம் கங்கை போலும் பலர் முயங்கு ஆர மார்பின்
புல்லன்மின் போமின் வேண்டா என்று அவள் புலந்து நீங்க
முல்லை அம் கோதை ஒன்றும் பிழைப்பிலேன் முனியல் நீ என்று
அல்லல் உற்று அரத்தம் ஆர்ந்த சீறடி தொழுதிட்டானே
விளக்கவுரை :
2085. வட்டிகைப் பாவை நோக்கி மகிழ்ந்து இருந்திலிரோ என்னாத்
தொட்டிமை உருவம் தோன்றச் சுவரையே பொருந்தி நின்றாய்
கட்டு அழகு உடைய நங்கை நீ எனக் கருதிக் கண்ணான்
ஒட்டி யான் நோக்கிற்று என்றான் ஒரு பிடி நுசுப்பினாட்கே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2081 - 2085 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books