சீவக சிந்தாமணி 2486 - 2490 of 3145 பாடல்கள்
2486. உழுந்து பயறு உப்பு அரிசி அப்பம் அருங் கலங்கள்
கொழுந்து படக் கூப்பி நனி ஆயிர மரக்கால்
செழுந்து படச் செந் நெல் நிறைத்து அம் நுண் கொடி அறுகின்
கொழுந்து குறைத்து அணிந்து கொலை வேல் கணவர் அமைத்தார்
விளக்கவுரை :
2487. செங் கயல் இரட்டை திருவார் சுடர் கணாடி
பொங்கு கொடி வார் முரசம் தோட்டி புணர் கும்பம்
மஙகலங்கள் எட்டும் இவை மணியின் புனைந்து ஏந்தி
அம் கயல் கண் அரிவையர்கள் தென் கிழக்கில் நின்றார்
விளக்கவுரை :
[ads-post]
2488. வெள் உருவ மாலை வட கீழ் இருவர் மின் போல்
ஒள் உருவ வாள் உருவி நின்றனார் தென் மேல்பால்
உள் உருக நோக்கி உயர் உழுத்து அகலும் ஏந்திக்
கள் உருவ மாலையவர் கை தொழுது நின்றார்
விளக்கவுரை :
2489. தோரை மலர் நீர் அறுகு துளும்பும் மணித் தாலம்
ஆர வட மேல்திசைக் கண் இருந்த அவிர் பஞ்சிச்
சீர் நிறைய வரை அகலம் திருத்தத் திரு நோக்கும்
வார முறைக் கருவி வடக்கு இருந்தன கண் மாதோ
விளக்கவுரை :
2490. பால் நுரையின் நொய்ய அணைப் பைங் கதிர்கள் சிந்தித்
தான் இரவி திங்களொடு சார்ந்து இருந்ததே போல்
வேல் நிரை செய் கண்ணியொடு மெல் என இருந்தான்
வான் உயர ஓங்கு குடை மன்னர் பெருமானே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2486 - 2490 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books

