சீவக சிந்தாமணி 1106 - 1110 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1106 - 1110 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1106. மாதரார்கள் கற்பினுக்கு உடைந்த மா மணிக் கலைத்
தீது இல் ஆரம் நூல் பெய்வார் சிதர்ந்து போகச் சிந்துவார்
போது உலாம் அலங்கலான் முன் போந்து பூந் தெரிவையர்
ஆ தகாது எனக் கலங்கி அவ்வயிறு அதுக்கினார்

விளக்கவுரை :

1107. வட்டிகை மணிப் பலகை வண்ண நுண் துகிலிகை
இட்டு இடை நுடங்க நொந்து இரியல் உற்ற மஞ்ஞையின்
கட்டு அழல் உயிர்ப்பின் வெந்து கண்ணி தீந்து பொன் உக
மட்டு அவிழ்ந்த கோதையார்கள் வந்து வாயில் பற்றினார்

விளக்கவுரை :

[ads-post]

1108. வினையது விளைவு காண்மின் என்று கை விதிர்த்து நிற்பார்
இனையனாய்த் தெளியச் சென்றால் இடிக்கும் கொல் இவனை என்பார்
புனை நலம் அழகு கல்வி பொன்றுமால் இன்றோடு என்பார்
வனை கலத் திகிரி போல மறுகும் எம் மனங்கள் என்பார்

விளக்கவுரை :

1109. நோற்றிலர் மகளிர் என்பார் நோம் கண்டீர் தோள்கள் என்பார்
கூற்றத்தைக் கொம்மை கொட்டிக் குலத்தொடு முடியும் என்பார்
ஏற்றது ஒன்று அன்று தந்தை செய்த இக் கொடுமை என்பார்
ஆற்றலள் சுநந்தை என்பார் ஆ தகாது அறனே என்பார்

விளக்கவுரை :

1110. தூக்குமின் காளை சீறின் துற்று இவன் உளனோ என்பார்
காக்குமால் வையம் எல்லாம் காவலன் ஆகி என்பார்
பாக்கியமே பெரிது காண் இதுவும் ஓர் பான்மை என்பார்
நோக்கன்மின் நாணும் கண்டீர் நுதி கொள் நாகரிகன் என்பார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books