சீவக சிந்தாமணி 1036 - 1040 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1036 - 1040 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1036. செந் தார்ப் பசுங் கிளியார் சென்றார்க்கு ஓர் இன் உரைதான்
தந்தாரேல் தந்தார் என் இன் உயிர் தாம் தாராரேல்
அந்தோ குணமாலைக்கு ஆ தகாது என்று உலகம்
நொந்து ஆங்கு அழ முயன்று நோற்றானும் எய்துவனே

விளக்கவுரை :

1037. சென்றார் வரைய கருமம் செரு வேலான்
பொன் தாங்கு அணி அகலம் புல்லப் பொருந்துமேல்
குன்றாது கூடுக எனக் கூறி முத்த ஆர் மணல் மேல்
அன்று ஆங்கு அணி இழையாள் ஆழி இழைத்தாளே

விளக்கவுரை :

[ads-post]

1038. பாக வரை வாங்கிப் பழுதாகின் பாவியேற்கு
ஏகுமால் ஆவி என நினைப்பப் பைங்கிளி யார்
மாகமே நோக்கி மடவாளே அவ்விருந்தாள்
ஆகும் யான் சேர்வல் எனச் சென்று அடைந்ததே

விளக்கவுரை :

1039. கண்டாள் நெடிது உயிர்த்தாள் கை தொழுதாள் கை அகத்தே
கொண்டாள் தினைக் குரல்தான் சூடினாள் தாழ் குழல் மேல்
நுண் தார்ப் பசுங்கிளியை நோவ அகட்டு ஒடுக்கி
வண் தாரான் செவ்வி வாய்க் கேட்டாள் தன் மெய் மகிழ்ந்தாள்

விளக்கவுரை :

1040. தீம் பால் அமிர்து ஊட்டிச் செம் பொன் மணிக் கூட்டில்
காம்பு ஏர் பணைத் தோளி மென் பறவை கண் படுப்பித்து
ஆம்பால் மணி நாம மோதிரம் தொட்டு ஐ என்னத்
தேம்பா எழுத்து ஓலை செவ்வனே நோக்கினாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books